கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 27-ம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்நிலையில் தனது அடுத்த பட அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரிக்கிறார்.


அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், புதிய பட அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். தமிழ் சினிமாவிலேயே பிரமாண்டமாக உருவான எந்திரன் படத்துக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் ரஜினி நடிக்க உள்ளார். 


மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்று சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.