அனிருத் கான்செர்ட் - காண குவிந்த ரசிகர்கள்
டிஸ்னி+ஹாட்ஸ்டாரின் அனிருத் மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். தற்போது வரும் படங்களில் அனிருத்தே பெரும்பான்மையான படங்களுக்கு இசையமைத்துவருகிறார். சமீபத்தில் அவர் இசையமைத்த விக்ரம், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்கள் அதிரிபுதிரி ஹிட்டடித்தன. இந்தச் சூழலில் அனிருத்தின் 'ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார்' மியூசிக் கான்செர்ட் கடந்த 21ஆம் தேதி சென்னையில் நடந்தது. அனிருத்தின் பாடல்களை நேரில் அனுபவிக்க 20,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.
இசை நிகழ்ச்சி நடந்த அரங்கில் அலைகடலென திரண்ட ரசிகர்களின் கூட்டம் மட்டுமின்றி, இந்நிகழ்வு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதால், நாடு முழுவதும் உள்ள ரசிகர்களும் இந்த கான்செர்ட்டை பார்த்து ரசித்தனர். இந்தியாவில் ஒரு இசை நிகழ்ச்சி இவ்வாறு நேரடியாக ஒளிபரப்பப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சியானது அனிருத்துடன் ரசிகர்கள் இணைந்து கொண்டாடும் ஒரு அற்புத அனுபவமாக இருந்தது. பாடகி ஜொனிட்டா காந்தியும் இந்நிகழ்ச்சியில் இணைந்து, அனிருத் கூட்டணியில் வெளியான பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக பாடி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தார்.
மேலும் படிக்க | 500 கோடி ரூபாய் பட்ஜெட்... ராமாயணத்துக்கு தயாராகும் அல்லு அர்ஜுன்
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்குகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ