தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்ணா: சனி, ஞாயிறு எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி தூங்காமல் அழுது கொண்டிருக்கிற சண்முகம் என்னாச்சு என்று கேட்க அவள் தனது மனதுக்குள் இருக்கும் காதலை சொல்லிய நிலையில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது சண்முகம் பரணியிடம் நான் உன்னை நம்ப மாட்டேன் என்று சொல்கிறான். பரணி என் மேல உனக்கு காதல் இல்லையா என்று கேட்கும் சண்முகம் இல்லை என்று சொல்கிறான். 


மேலும் படிக்க | Star Trailer : கவினின் ஸ்டார் ட்ரைலரில் ‘இதை’ கவனித்தீற்களா?


எஸ்கேப் ஆகி ஓடும் சண்முகம்


பிறகு பரணி நான் அழாமல் இருக்க எனக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தி என்று சொல்கிறார். அதெல்லாம் செய்ய முடியாது என்று சொல்லும் சண்முகம் என்ன உன்ன சமாதானப்படுத்தணுமா என்று சொல்லி அரிவாளை தூக்கி அவளது கழுத்தில் வைகுண்டம் என் மருமகள் கழுத்துலையா கத்தியை வைக்கிற சண்முகம் எஸ்கேப் ஆகி ஓடுகிறான். 


அடுத்ததாக மறுபக்கம் பாக்கியம் மற்றும் இசக்கி சிவபாலனிடம் நாளைக்கு இங்க நகைகளுக்கு கவரிங் நகை செய்ய ஏற்பாடு பண்ணு. இந்த நகை எல்லாம் கொடுத்து எப்படியாவது சண்முகத்தை அந்த ஸ்கூலை வாங்க வைக்கணும் என்று சொல்கின்றனர். 


அதேபோல் பணத்தை ரெடி பண்ணி அதை ரத்னாவிடம் கொடுக்க அவள் வேண்டாம் என்று சொல்ல கடனா வச்சுக்கோ என்று சொல்லி கொடுக்கின்றனர். பிறகு கவரிங் நகையுடன் பாக்கியம் வீட்டுக்கு வர சௌந்தரபாண்டி என்னடி நகை‌ புதுசா பளபளக்குது என்று கேட்கிறார். 


சௌந்தரபாண்டியை சமாளிக்கும் பாக்கியம்


அது கவரிங் நகை என்ற விஷயம் தெரிந்து விடுமா என்ற பில்டப் என்கிற ஒரு வழியாக பாக்கியம் சௌந்தரபாண்டியை சமாளித்து உள்ளே செல்கிறாள். பிறகு ரத்னா கனியை ஸ்கூலில் இருந்து கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வரும்போது எதிரே வரும் முத்துப்பாண்டி உன்னை எப்படியாவது அந்த ஸ்கூல்ல வாங்கணும்னு நினைக்கிறான் ஆனா பணம் தான் இல்ல. அவனுக்கு தேவையான பணத்தை நான் கொடுக்கிறேன் நீ எதுக்கு இன்னொருத்தனை கத்துக்கிட்டு போய் கஷ்டப்படணும்? என் வீட்டுக்கே வந்து அக்கா உன் தங்கச்சியும் ஒன்னா சேர்ந்து ஒற்றுமையாக வாழுங்க என்று சொல்கிறான். 


இதைக் கேட்டு கோபப்படும் ரத்னா முத்துப்பாண்டி திட்டி விட்டு அங்கிருந்து வீட்டுக்கு வர கனி நடந்ததை நினைத்து அழுது கொண்டிருக்க சண்முகத்திற்கு விஷயம் தெரிய வந்து முத்துப்பாண்டியை வெட்ட அரிவாளுடன் கிளம்பி வருகிறான்.


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?


அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | ‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்.. வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ