பரணி ரூமுக்குள் ஷண்முகம்.. செக்மேட் வைத்த தோழிகள் - அண்ணா சீரியல் எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த தோழிகள் பரணி வாயால் சண்முகம் தான் புருஷன் என்பதை சொல்ல வைக்க பிளான் போட்டனர். இதனை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, பாட்டு போட்டு நடத்த சண்முகமும் அவனது தங்கைகளும் ஒரு டீமாக பங்கேற்க பரணியும் அவளது தோழிகளும் இன்னொரு டீமாக பங்கேற்கின்றனர். இவர்களுக்கிடையே பாட்டு போட்டி நடந்து முடிகிறது. அடுத்து ஷண்முகம் ஒரு கட்டிலை போட்டு அதில் படுத்து கொள்ள இதை பார்த்த தோழிகள் வேலைக்காரன் ஏன் இங்க தூங்குறான்? இதெல்லாம் பார்க்க நல்லாவே இல்லை. அவனே உடனே வெளியே அனுப்பு அவன் வீட்டுக்கு போகட்டும் என சொல்கின்றனர்.
மேலும் படிக்க | மன்சூர் அலிகானுக்கு செக் வைத்த தேசிய மகளிர் ஆணையம்-தாமாக முன் வந்து வழக்கு பதிவு!
அதன் பிறகு பரணி நீ உன் வீட்டுக்கு போ என்று சண்முகத்திடம் சத்தம் போட போனு சொன்னா எங்க போறது என்று கேட்க யாருக்கும் தெரியாமல் நீ என் ரூமுக்குள் வந்து படுத்துக்க என்று சொல்கிறாள், சண்முகமும் அதே போல் ரூமுக்குள் சென்று விட பரணி சத்தம் போட கூடாது, இன்னும் 84 நாள் தான் என்று சொல்ல இவன் சரிங்க பொண்டாட்டி என்று படுத்து கொள்கிறான்.
அடுத்ததாக நடு இரவில் தோழிகள் எங்களுக்கு குளுருது என்று சொல்லி ரூமுக்குள் எழுந்து வர சண்முகத்தை பார்த்து இவன் எதுக்கு இங்க படுத்து இருக்கான் என கேட்டு ஷாக் கொடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்தாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | திடீரென கர்பமான பிக்பாஸ் பாேட்டியாளர்? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு, ஆன்மீகம், ஆயிலகம் என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ