தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் ஒரு சிலவற்றை மட்டுமே ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். அப்படி ரசிகர்கள் பலர் விரும்பி பார்க்கும் சீரியல்களுள் ஒன்று, அண்ணா. இந்த தொடரில் பிரபல சின்னத்திரை நடிகர் செந்தில்குமார் ஷன்முகம் எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 4 தங்கைகளையும் கரை சேர்க்க விரும்பும் பாசமிகு அண்ணனாக செந்தில் இதில் நடித்துள்ளார். இந்த தொடர் முதல் எபிசோடில் இருந்து தற்போது வரை பல விருவிருப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. இன்றைய எபிசோடிலும் இதில் பல சம்பவங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாமா..? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்றைய எபிசாேட்..


‘அண்ணா’ சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் மண்டபத்தில் மாஸாக என்ட்ரி கொடுக்கிறார். இந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


இன்றைய எபிசோட்: 


மண்டபத்துக்குள் சண்முகம் தெரியாமல் ஒருவர் மீது இடிக்க பிறகு அது கோவிலில் அழுது கொண்டிருந்த நர்ஸ் என தெரிய வந்து நீ என்னம்மா இங்க உன்னை ஏமாத்தணுவன் இங்கதான் இருக்கானா? சொல்லு அவனை அடிச்சு
உதைச்சி உன் கழுத்துல இங்கேயே தாலி கட்ட வைக்கிறேன் என்று சொல்ல அந்த நர்ஸ் அப்படி எல்லாம் இல்லனா சும்மா வந்தேனு சொல்லி சமாளித்து அங்கிருந்து கிளம்புகிறார். 


பிறகு சண்முகம் கிச்சனுக்கு வந்து சமையல் செய்து கொண்டிருப்பவர்களுக்கு உதவுகிறான். அந்த நேரம் பார்த்து அங்கு வரும் சௌந்தரபாண்டி இந்த கல்யாணம் யார் கூட வேணாலும் நடக்கலாம் இல்ல நடக்காமல் கூட போகலாம் ஆனால் எது நடந்தாலும் சாப்பாடு மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்ல இதை கேட்ட சண்முகம் அதிர்ச்சி அடைகிறான். சௌந்தரபாண்டி எதுக்கு இப்படி சொல்லணும் ஏதோ திட்டம் இருக்கிறது என சந்தேகம் எழுகிறது. 


மேலும் படிக்க | விவேக் to மாரிமுத்து..மாரடைப்பு காரணமாக உயிரிழந்த கோலிவுட் பிரபலங்கள்..!


மறுபக்கம் சண்முகம் வீட்டின் வெளியே போலீஸ் கெட்டப்பில் காவலுக்கு இருக்கும் ரவுடிகள் சரக்கு அடிக்க வைகுண்டத்திற்கு அது தெரியவந்து சாப்பாடு கொடுத்துவிட்டு உள்ளே செல்ல பிறகு ரத்னா கதவை அடைக்க வரும்போது இவர்கள் இருவரும் ரத்னாவை செம ஃபிகர் அதான் முத்துப்பாண்டி ஐயா இவர் பின்னாடி சுத்துறாரு என்று காது பட பேச அவள் உள்ளே சென்று அப்பாவிடம் இவங்க சரியில்ல போலீஸ் மாதிரி தெரியல என்று சொல்கிறாள். 



நீ படுத்து தூங்கு என்று சொல்ல ரத்னா தூக்கம் வராமல் இவர்கள் சொன்னதையே நினைத்து பயப்படுகிறாள். இங்கே மண்டபத்துக்குள் வந்து இறங்கும் கேரளா ஃபேமிலி இந்த கல்யாணத்துக்கு சூடாமணி வருவா அப்படி இல்லனாலும் அவ பையன் சண்முகத்தை போட்டு தள்ளி அவனுடைய காரியத்துக்கு அவளை வர வச்சி அவளையும் கொல்லனும் என பிளான் போடுகின்றனர். 


இவர்கள் சண்முகம் யாரு என மண்டபத்தில் ஒவ்வொருவரிடமும் விசாரித்து கடைசியில் சண்முகத்திடமே வந்து சண்முகம் குறித்து விசாரிக்க இங்கு நிறைய சண்முகம் இருக்காங்க நீங்க யாரு தேடி வந்தீங்க என்று கேட்டுக் கொண்டிருக்க தாத்தா சூடாமணியோட பையன் என்று சொல்ல அந்த நேரம் பார்த்து ரத்னா போன் செய்ய சண்முகம் போனை எடுத்துப் பேச ரத்னா போலீஸ் குறித்து சொல்கிறாள். 


அவனுங்க பிரச்சனை பண்ற வரைக்கும் பயப்பட வேண்டாம் நீ படுத்து தூங்கு என சொல்லி போனை வைக்க அதற்குள் இந்த கேரளா ஃபேமிலி சௌந்தரபாண்டியை பார்த்து அங்கிருந்து மறைந்து கொள்கின்றனர். பிறகு கார்த்திக் மண்டபத்துக்குள் வந்து இறங்க பரணி அவனுக்கு கை காட்ட அவனும் பரணிக்கு கை காட்ட இதையெல்லாம் பார்த்த செல்வம் கடுப்பாகிறான். 


காணத்தவறாதீர்கள்..


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 


மேலும் படிக்க | 2 நாளில் 200 கோடியை தாண்டிய ஜவான்..! அசல் வசூல் நிலவரம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ