சாதனை படைக்கும் “பாகுபலி 2”: இந்தியாவில் 6500 திரையரங்குகளில் வெளியீடு!!
ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் படம் “பாகுபலி 2”. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா, சத்தியராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி ரிலீஸாகிறது.
இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் இந்திய அளவில் பல சாதனை நிகழ்த்தியது.
இந்நிலையில் “பாகுபலி 2” இந்தியாவில் மட்டும் 6500 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இந்திய அளவில் வேறெந்த படமும் இத்தனை திரையரங்குகளில் வெளியானதில்லை. இதுவா ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
“பாகுபலி”முதல் பாகம் ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.