இயக்குநர் பா. இரஞ்சித் காதல் களத்தை தேர்ந்தெடுத்து நட்சத்திரம் நகர்கிறது என்று முழுக்க முழுக்க காதல் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், சார்பட்டா பரம்பரையில் கதாநாயகியாக நடித்த துஷாரா விஜயன், டான்சிங் ரோஸாக நடித்த ஷபீர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். வழக்கமாக பணியாற்றும் குழுவோடு இல்லாமல் புதிய தொழில்நுட்ப குழுவோடு களமிறங்கியிருக்கிறார் பா.இரஞ்சித். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படத்தில் இடம்பெற்றிருக்கும் ரங்கராட்டினம் என்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. அதேபோல் ட்ரெய்லரும் வெளியாகி பரவலான கவனத்தை பெற்றிருக்கிறது. படமானது ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாள்களே இருப்பதால் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. 


 



அதன்படி இயக்குநர் இரஞ்சித் மற்றும் படக்குழுவினர் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று புரோமோஷனில் ஈடுபட்டனர். அந்தவகையில்,  பா.இரஞ்சித் உள்ளிட்ட பட குழுவினர் படத்தின் புரோமோஷனுக்காக நேற்று மும்பை சென்றனர். அங்கு பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப், இயக்குநர் மற்றும் நடிகையுமான நந்திதா தாஸ் உள்ளிட்டோருக்கு நட்சத்திரம் நகர்கிறது படத்தை திரையிட்டு காண்பித்தனர்.


 



படத்தைப் பார்த்த அனுராக், பா.இரஞ்சித்தை கட்டியணைத்து வெகுவாக பாராட்டினார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. முன்னதாக, "நட்சத்திரம் நகர்கிறது" திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | வெற்றியும், தோல்வியும் உளவியல் தாக்கத்தை உருவாக்கும் - விக்ரம் பேச்சு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ