பாலிவுட்டின் பிரபல நடிகையான அனுஷ்கா சர்மா, தான் படங்களில் நடிப்பதில் இருந்து ப்ரேக் எடுக்க போவதை மறைமுகமாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனுஷ்கா சர்மா:


பெங்களூருவில் பிறந்து, மாடலிங் துறையில் நுழைந்து தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்பவர், அனுஷ்கா சர்மா. 2006ஆம் ஆண்டு ஷாருக்கானுடன் ராப் நே பனா டி ஜோடி என்ற படத்தில் நாயகியாக நடித்து தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். இப்போது இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார்களாக விளங்கும் சல்மான் கான், ரன்வீர் சிங், வருண் தவான் உள்ளிட்ட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். கடந்த ஆண்டு குவாலா எனும் படத்தில் காமியோ ரோலில் வந்த இவர், அதையடுத்து இன்னொரு படத்தில் நடித்து வருகிறார். 


திருமணம்-தாய்மை:


பாலிவுட்டிற்கும் கிரிக்கெட்டிற்கும் நெடுநாட்களாகவே ஏதோ தொடர்பு இருந்து வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் பலர் பாலிவுட் நாயகிகளை கரம் பிடித்துள்ளனர். அந்த லிஸ்டில் அனுஷ்கா-விராட் ஜோடியும் இணைந்தது. சுமார் 5 வருடமாக தொடர்ந்த இவர்களது காதல் 2017ஆம் ஆண்டு திருமணத்திற்கு பிறகு இன்னும் பலமாகி உள்ளது. இவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வாமிகா என பெயரிட்டு ஊடகத்திற்கு கூட குழந்தையின் முகத்தை காட்டாமல் பாதுகாப்புடன் வளர்த்து வருகின்றனர். இந்த குழந்தைக்கு தற்போது இரண்டரை வயது ஆகியுள்ளது. இதையடுத்து, அனுஷ்கா சர்மா சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் சினிமா வாழ்க்கை குறித்தும் அவரது குழந்தை வாமிகா குறித்தும் பேசியுள்ளார். 


மேலும் படிக்க | ‘இதெல்லாம் உண்மை கதையா?’ கேரளா ஸ்டோரி படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் காட்டம்..!


“எனது குழந்தைக்கு நான்தான் தேவைப்படுகிறேன்..”


அனுஷ்கா, தனது குழந்தை குறித்து பேசுகையில் விராட்டை விட தான் தனது குழந்தைக்கு அதிகம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். “எனது குழந்தைக்கு நான் அதிகம் தேவைப்படும் வயதில்தான் அவள் இருக்கிறாள். அவளுடன் அதிக நேரம் செலவிடுவதற்கான வழியை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்” என்று தனது நேர்காணலில் அனுஷ்கா கூறினார்.  2018ஆம் ஆண்டு வரை தொடர்ந்து படங்களில் நடித்துக்காெண்டிருந்த அனுஷ்கா இப்போது ஆண்டிற்கு ஒரு படம்தான் நடித்துவருகிறார். தாய்மை அடைந்த பிறகு குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் இனி தனது குழந்தையுடன் சேர்ந்து நேரம் செலவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார். 


“அதிகம் படங்களில் நடிக்க விருப்பமில்லை..”


வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வரும் அனுஷ்கா, தனக்கு இப்போதைக்கு அதிக படங்களில் நடிக்க விருப்பமில்லை என கூறியுள்ளார். இது குறித்து விவரித்த அவர், “நான் ஒரு நடிகையாக விரும்பி நடிக்க விரும்புகிறேன். அதனால்தான் வருடத்திற்கு ஒரு படம் நடிக்க முடிவு செய்துள்ளேன். இது குறித்து யாரும் எனக்கு அட்வைஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு தெரியும்..” என்று கூறியுள்ளார். 


பிரேக் எடுக்க உள்ளாரா?


அனுஷ்கா ஷர்மாவின் இந்த நேர்காணல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அனுஷ்கா ஷர்மா தான் சினிமாவில் இருந்து ப்ரேக் எடுக்க உள்ளதை சூசகமாக கூறுகிறாரோ என சில ரசிகர்கள் தங்களது கருத்துகளை கூறிவருகின்றனர். 


மேலும் படிக்க | குக் வித் கோமாளி எபிசோடில் கண் கலங்கிய செஃப் தாமு? அட இதுதான் காரணமா..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ