தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்து டாப் ஹீரோயினாக இருப்பவர்  நடிகை அனுஷ்கா ஷெட்டி. பாகுபலி படத்தின் மூலம் இவர் இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகையாக மாறினார். தமிழில் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை அளித்துள்ள நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பெயரில் பண மோசடி ஒன்று நடந்துள்ளது. இது சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பெயரில் ஒரு நபர் செய்த மோசடி தற்போது அம்பலமாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த சம்பவத்தில் தன்னால் அனுஷ்கா ஷெட்டியின் கால்ஷீட் பெற்றுத்தர முடியும் என கூறி ஒரு நபர் தயாரிப்பாளரிடம் ரூ. 51 லட்சம் மோசடி செய்துள்ளார். 


மேலாலர் எல்லா ரெட்டி என்பவர் தெலுங்கு திரைப்பட வட்டாரத்தில் பிரபலமானவர். இவர் அனுஷ்கா ஷெட்டியை தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், தன்னால் அவரது கால்ஷீட்டை பெற்றுத் தர முடியும் என்றும் கூறி புதிய தயாரிப்பாளரான லட்சுமண் சாரியை நம்பவைத்துள்ளார். அனுஷ்கா ஷெட்டியை சந்தித்து அவரிடம் கால்ஷீட் பெரும் ஆசையில், தயாரிப்பாளரும் சுமார் 51 லட்சம் வரை எல்லா ரெட்டிக்கு கொடுத்துள்ளார். 



மேலும் படிக்க | 'மது, சிகரெட், மாமிசம்... இந்த மூணும் இருக்கே' - ஹெல்த் சீக்ரெட் சொல்லும் ரஜினி


இது மட்டுமின்றி இசையமைப்பாளர் மணி சர்மாவின் கால்ஷீட்டையும் பெற்றுத்தருவதாக எல்லா ரெட்டி கூறியுள்ளார். அனுஷ்கா ஷெட்டி மற்றும் இசை அமைப்பாளருடன் தான் மிக நெருக்கமாக இருப்பதாக தன்னை காட்டிக்கொண்டு எல்லா ரெட்டி இந்த மோசடியை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இறுதியில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தயாரிப்பாளர் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்துள்ளார். 


முன்னதாக இதே பிரச்னை குறித்து தயாரிப்பாளர் சங்கத்திடம் லக்ஷ்மண் சாரி புகார் அளித்திருந்தார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எல்லா ரெட்டியை கண்டித்துள்ளார். ஆனால், பணம் திரும்ப வராததால், பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் தயாரிப்பாளர் புகார் செய்தார்.


நட்சத்திரங்களுடன், இசை அமைப்பாளர்களுடன் இருக்கும் போட்டோக்களை காட்டி நடிக்க, பாட வாய்ப்பு வாங்கித்தருவதாக மோசடிகள் நடப்பதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். நடிகைகளிடமும், நடிகர்களிடமும் கால்ஷீட் பெற்றுத் தருவதாக கூறி புதிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை ஏமாற்றும் நிகழ்வுகளும் இப்போது அதிகமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா பெயரிலும் இப்படி ஒரு மோசடி நடந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | Pathan box office collection: ஷாருக்கானின் 'பதான்' முதல் நாள் வசூல் எவ்வளவு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ