'மது, சிகரெட், மாமிசம்... இந்த மூணும் இருக்கே' - ஹெல்த் சீக்ரெட் சொல்லும் ரஜினி

Rajinikanth Health Secret: ஒய்.ஜி. மகேந்திரனின் நாடக நிகழ்வில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் சைவ, அசைவ உணவுகளை சாப்பிடுவது குறித்தும், அவரது ஆரோக்கியத்திற்கு யார் காரணம் என்றும் தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 27, 2023, 09:03 AM IST
  • காலையிலேயே ஆப்பம் பாயா, சிக்கன் 65 சாப்பிடுவேன் - ரஜினி
  • எனது ஆரோக்கியமான வாழ்வுக்கு என் மனைவிதான் காரணம் - ரஜினி
  • சைவம் சாப்பிடுபவர்கள் பார்த்தாலே பாவமாக இருக்கும் - ரஜினி
'மது, சிகரெட், மாமிசம்... இந்த மூணும் இருக்கே' - ஹெல்த் சீக்ரெட் சொல்லும் ரஜினி

Rajinikanth Health Secret: சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் "சாருகேசி"  நாடகத்தை பார்வையிட்டு, விரைவில் அந்த நாடகம் திரைப்படமாக்கப்பட உள்ள அறிவிப்பையும் நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஜன. 26) வெளியிட்டார். பின்னர் சாருகேசி நாடகத்தில் நடித்த நடிகர்களையும் கௌரவித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் மேடை பேசியபோது, "கடந்த 47 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மயிலாப்பூரில் 'ரகசியம் பரம ரகசியம்' நாடகம் பார்க்க சென்ற நான், அரை மணி நேரம் காத்திருந்தும் நாடகத்திற்குள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஆனால் காலம் ஒருவரை எங்கிருந்து எப்போது எங்கு கொண்டு போகும் என தெரியாது. அதை மகா காலம் என்று சொல்வார்கள். அவ்வாறு 50ஆவது விழாவில் தலைமை விருந்தினராக வந்திருக்கிறேன் என்றால் எல்லாம் அந்த காலத்தின் விளையாட்டு.

ஜெயலலிதா, நாகேஷ், சோ, விசு போன்றவர்கள் YGP நாடகக் குழுவில் இருந்து வந்தவர்கள். பாதுகாப்பும் கண்ணியமும் மிக்க நாடக குழுவினராக  திகழ்கிறார்கள் என்பது பெருமிதம் அளிக்கிறது. சிவாஜி கணேசன் தற்போது இந்த நாடகத்தை பார்த்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பார் என்பதை யூகிக்கவே முடியாது. 

மேலும் படிக்க | Pathan box office collection: ஷாருக்கானின் 'பதான்' முதல் நாள் வசூல் எவ்வளவு?

எல்லா புகழும் மனைவிக்கே...

இந்த நாடகத்தை படமாக எடுக்கும் போது நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமே இல்லை. ஒய்.ஜி மகேந்திரனுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியாது. என் மனைவி லதாவை எனக்கு அறிமுகப்படுத்தியவர் ஒய்ஜிஎம் தான்.

இன்று நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமே என் மனைவிதான். கெட்ட சிநேகிதர்களால் கெட்ட பழக்கங்கள் வைத்துக் கொண்டவன் நான். நடத்துநராக இருந்தபோதே எவ்வளவு பாக்கெட் சிகரெட் அடித்தேன் என்றே தெரியாது. காலையிலேயே பாயா ஆப்பம், சிக்கன் 65 சாப்பிடுவேன். சிகரெட், மது மற்றும் அசைவ உணவு என மூன்றையும் சேர்த்து சாப்பிடுபவர்கள் 60 வயதுக்கு மேல் வாழ்ந்ததே கிடையாது. இப்படிப்பட்ட பழக்கம் கொண்ட என்னை அன்பால் மாற்றியவர் லதா. என்னை ஒழுக்கமாக மாற்றி இருக்கிறார்.

நடத்துநராக இருக்கும்போது தினமும் மது குடிப்பேன், சிகரெட் பிடிப்பேன், நாள்தோறும் இரண்டு முறை மாமிசம் சாப்பிடுவேன். சைவப் பிரியர்களை பார்த்தால் அப்போது எனக்கு பாவமாக தெரியும்" என கூறினார்.

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்தாண்டு வெளியாகும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | தளபதி 67.. இன்னும் தோ கிலோ மீட்டர்.. வாரிசுகளை புலம்பவிடும் லோகேஷ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News