தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலாமானவர். தென்னிந்திய சினிமாவில் விஜயசாந்திக்குப் பின்னர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்தில் நடித்து புதிய அத்தியாயத்தையும் உருவாக்கியவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல முனனணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அனுஷ்கா (Anushka Shetty). தற்போது கடந்த சில நாட்களாக அனுஷ்காவின் திருமணம் குறித்து அவ்வப்போது தகவல் கசிந்து வருகின்றது. பாகுபலி வில்லன் நடிகர் ராணாவை அனுஷ்கா திருமணம் செய்யவுள்ளதாக முதலில் தகவல் பரவியது. பின்னர் பாகுபலி நாயகன் பிரபாஸ் உடன் அனுஷ்கா காதல் வலையில் விழுந்ததாகக் கூறப்பட்டது. அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஜோடி சேர்ந்ததால் அது உறுதி என நம்பிய ரசிகர்களுக்கு மீண்டும் மறுப்பு தெரிவித்தார் அனுஷ்கா.


ALSO READ | Adipurush திரைப்படத்தில் சீதாவாக Kriti Sanon நடிப்பது உண்மையா?


பிரபாஸுக்குப் பிறகு அனுஷ்கா ஒரு தொழிலதிபரை திருமணம் செய்வார் என்ற செய்தி பரவியது. ஆனால் இந்த செய்திகும் மறுப்பு தெரிவித்தார் நடிகை அனுஷ்கா. தென்னிந்தியாவில் ராஞ்சி போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரரை அனுஷ்கா திருமணம் செய்யவிருப்பதாக வெளியான தகவலையும் அவர் மறுத்துவிட்டார். 


இந்தநிலையில் தெலுங்கு சினிமா இயக்குனர் ஒருவரை அனுஷ்கா காதலிப்பதாகவும், இருவரது திருமணம் விரைவில் நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகிறது. 


இதற்கிடையில், அனுஷ்கா ஷெட்டி திருமணம் பற்றி ஒரு பிரபல ஜோதிடரால் கணிக்கப்பட்டது. நடிகை திருமணம் குறித்து பண்டிட் ஜெகநாத் குருஜியின் கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவரது கூற்றுப்படி, அனுஷ்காவின் திருமணம் 2023 க்குள் நடக்க உள்ளது. மேகும் கூறிய அவர் அனுஷ்கா தனது வாழ்க்கையில் மிகவும் நேர்மையானவர் மற்றும் அவரது முகபாவனைகளின் அடிப்படையில், அனுஷ்கா ஒரு தொழிலதிபரை விட ஒரு வெளி நபரை திருமணம் செய்து கொள்வார். எனவே அனுஷ்கா 2023 க்குள் திருமணம் செய்து கொள்வார் என்று அவர் கூறினார். இந்த தகவலை எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 


ALSO READ | நிஜத்தில் இணையுமா பாகுபலி ஜோடி... திருமணம் குறித்து அனுஷ்கா வெளியிட்ட தகவல்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR