அனுஷ்கா பிரபல தெலுங்கு இயக்குநரின் மகனை விரைவில் திருமணம் செய்யப் போவதாக தெலுங்கு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ், தெலுங்கில் கலக்கிய வருபவர் அனுஷ்கா. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள அனுஷ்காவுக்கு இப்போது 38 வயது. இவருக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வந்தன. அதை இருவரும் மறுத்தார்கள். 


அண்மையில் கிரிக்கெட் வீரரை அனுஷ்கா காதலிப்பதாகவும், அவருடன் டேட்டிங் சென்றதாகவும் செய்திகள் பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்த அனுஷ்கா, தனது திருமண முடிவை பெற்றோரிடம் விட்டுவிட்டதாக கூறினார். 


இந்நிலையில், தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடிக்கும், அனுஷ்காவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தற்போது புதிய தகவல் பரவி வருகிறது. அனுஷ்காவுக்கும் பிரபல தெலுங்கு இயக்குநரின் மகனுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுஷ்கா திருமணம் செய்யவிருக்கும் நபரும் ஒரு இயக்குநர் தான். மனைவியை பிரிந்து வாழும் அந்த இயக்குநரை தான் அனுஷ்கா விரைவில் திருமணம் செய்யப் போகிறாராம். 


அனுஷ்காவும், அந்த இயக்குநரும் காதலித்து வருகிறார்களாம். அவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டிவிட்டதால் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல இயக்குனர் ராகவேந்திரராவின் மகனான பிரகாஷ் கோவலமுடிக்கு 44 வயது ஆகிறது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.