April 2024 Tamil Movie Releases : தமிழ் திரையுலகை பொறுத்தவரை, கடந்த சில வாரங்களாக பெரிய படங்களோ அல்லது புதுப்படங்களோ பெரிதாக வெளியாகவில்லை. அனைத்து பெரிய நடிகர்களின் படங்களும் தற்போது படப்பிடிப்பு பணியில் உள்ளன. இந்த நிலையில், தற்போது ரிலீஸாகி வரும் படங்களும் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்த படங்கள்தான். சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வெளியான படங்களை தற்போது தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் ரீ-ரிலீஸ் செய்து வருகின்றன. மலையாள படங்களான பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ், ஆடு ஜீவிதம் உள்ளிட்ட படங்கள்தான் தற்போது தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்த நிலையில், ஏப்ரல் மாதம் ஆரம்பித்துள்ள நிலையில் இம்மாதம் வெளியாக இருக்கும் படங்கள் குறித்து பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

DeAr ரிலீஸ்: 


இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ் குமார் நடித்த இரண்டு படங்கள் இந்த மாதம் திரைக்கு வர இருக்கின்றன. வரும் 11ஆம் தேதி இவர் நடித்துள்ள டியர் படம் வெளியாக இருக்கிறது. இதில் இவர் ஐஸ்வர்யா ராஜேஷுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்களுக்கும் ஜிவி பிரகாஷ் குமாரே இசையமைத்திருக்கிறார். இதில் காளி வெங்கட், ரோகினி, நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 


கள்வன்:


ஜி.விபிரகாஷ் குமார் கிராமத்து வேடத்தில் நடித்துள்ள இன்னொரு படம், கள்வன். இந்த படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளர். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக லவ் டுடே பட நாயகி இவானா நடித்திருக்கிறார். இவர்கள் ஏற்கனவே நாச்சியார் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். இப்படம், வரும் 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 


ரோமியோ:


விஜய் ஆண்டைன், மிருணாளினி ரவி நடித்திருக்கும் ரோமியோ திரைப்படம், இம்மாதம் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படம், காதல் படம் எனப்தை விஜய் ஆண்டனி சமீபத்திய பேட்டி ஒன்றி குறிப்பிட்டிருந்தார். 


மேலும் படிக்க | அட்லீ-அல்லு அர்ஜுன் படத்தில் கதாநாயகி ‘இவர்’தான்! அட நம்ம ஊர் அழகி..


ரத்னம்:


விஷால்-ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள படம், ரத்னம், இந்த படம் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மொழியிலும் வெளியாக இருக்கிறது. இதில் சமுத்திரகனி கௌதம் மேனன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரியா பவானி ஷங்கர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படம், வரும் 26ஆம் தேதி திரையிடப்பட உள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். 


அரண்மனை ஏப்ரல் மாதம் ரிலீஸா? 


சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம், அரண்மனை 4. இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், இதன் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இதன் ரிலீஸ் ஏப்ரல் மாதத்தில்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 


ஏப்ரல் மாதம் அதிக படங்கள் ரிலீஸ் ஆகாததற்கு காரணம் என்ன? 


ஏப்ரல் மாதம் பெரிதாக படங்கள் ரிலீஸ் ஆகாததற்கு வரவிறுக்கும் மக்களவை தேர்தல் காரணமாக இருக்கிறது. இந்த தேர்தலை ஒட்டி, பள்ளி மாணவர்களுக்கு முன்னரே தேர்வுகள் வைக்கப்பட்டு, விடுமுறைகளும் விடப்பட்டு வருகின்றன. இதனால்தான், அதிக படங்களோ, பெரிய பட்ஜெட் படங்களோ இந்த மாதத்தில் வெளியாகவில்லை. இருப்பினும் தற்போது வெளியாகும் படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர். 


மேலும் படிக்க | புதிதாக சொகுசு கார் வாங்கிய VJ அர்ச்சனா! இதன் விலை இவ்வளவா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ