விஜய் டிவி பிரபலத்தை இன்ஸ்டாவில் ஃபாலோ செய்யும் இசைப்புயல்! நடிகையின் ரியாக்ஷன்
திருக்குறள் சார்ந்து இன்ஸ்டாவில் வீடியோ பதிவு செய்யும் விஜய் டிவி பிரபலத்தை இசைப்புயல் ஏஆர் ரகுமான் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்.
விஜய் டிவியில் பிரபலமான தொடரில் நடித்த நடிகையை இசைப்புயல் ஏஆர் ரகுமான் பின் தொடர்வது, அந்த நடிகைக்கு மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் சீரியல் அல்லது காமெடி ஷோ என எதில் வந்தாலும், மக்களிடம் உடனடியாக பிரபலமாகிவிடுவார்கள். இந்த தொலைக்காட்சியில் அண்மையில் நிறைவடைந்த வேலைக்காரன் சீரியலில் நடித்தவர் நடிகை திவ்யா. வில்லி கனகா கேரக்டரில் நடித்து வரவேற்பை பெற்றிருந்த அவர், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார்.
மேலும் படிக்க | தமிழ்நாடே அலறும்படி ஒரு சம்பவம் - வெளியானது எண்ணித்துணிக ட்ரெய்லர்
சீரியலில் நடிக்கும்போதும் கூட, செட்டில் இருந்து விதவிதமான வீடியோக்களை அப்லோடு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். சமையல் மந்திரம் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியிருந்தாலும், நடிப்பு மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் லட்சக்கணக்கானோர் பின்தொடரும் பிரபலமாக மாறிவிட்டார். குழந்தைகளுக்கு எளிமையாக திருக்குறள் சென்றடையும் வகையில் அறிவார்ந்த வீடியோக்களை பதிவேற்றி வந்த திவ்யா, தமிழ் மொழியின் சிறப்புகளையும் வீடியோக்களில் பதிவிட்டு வந்தார். அவரின் வீடியோவை பார்த்து ஏற்கனவே நடிகர் விவேக் பாராட்டியிருந்த நிலையில், புதிதாக மகுடம் சேர்க்கும் வகையில் இசைப்புயல் ஏஆர் ரகுமான், திவ்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர தொடங்கியுள்ளார்.
திவ்யாவின் தமிழ் மொழியின் மீதான ஆர்வமும், திருக்குறள் சார்ந்து அவர் பதிவிடும் வீடியோக்களும் வெகுவாக கவர்ந்ததால் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏ.ஆர்.ரகுமான் பின் தொடர்வதற்கான காரணம். ஏஆர் ரகுமானை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோர் ஃபாலோ செய்யும் நிலையில், வெறும் 158 பேர் மட்டுமே ரகுமான் ஃபாலோ செய்கிறார். மிகமிக முக்கியமான ஆட்களை மட்டுமே பாலோ செய்பவர்களில் ஒருவராக நடிகை திவ்யா மாறியிருக்கிறார். அண்மையில், விஜய் டிவி சீரியலில் நடிக்கும் கேப்ரியல்லாவை பாலோ செய்திருந்தார். அந்த வரிசையில் திவ்யாவும் இணைந்திருக்கிறார். இதற்காக இசைப்புயலுக்கு நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | வாடிவாசல் - மாடு பிடிக்க சூர்யா கற்றுக்கொண்ட நுட்பங்கள் என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ