வாடிவாசல் - மாடு பிடிக்க சூர்யா கற்றுக்கொண்ட நுட்பங்கள் என்ன தெரியுமா?

வாடிவாசல் திரைப்படத்தில் மாடு பிடிப்பதற்காக மாடுபிடி வீரர்களிடம் சூர்யா கற்றுகொண்ட நுட்பங்கள் தொடர்பான வீடியோ அவரது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 23, 2022, 06:06 PM IST
  • சி.சு. செல்லப்பா எழுதிய குறுநாவல் வாடிவாசல்
  • இதனை மையப்படுட்தி வெற்றிமாறன் படம் எடுக்கிறார்
  • படத்தின் நாயகனாக சூர்யா நடிக்கிறார்
வாடிவாசல் - மாடு பிடிக்க சூர்யா கற்றுக்கொண்ட நுட்பங்கள் என்ன தெரியுமா? title=

தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தேசிய விருது நடிகர் சூர்யா முதல்முறையாக நடிக்கும் படம் வாடிவாசல். எழுத்தாளர் சி.சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு இந்தப் படம் உருவாகிறது. வெற்றிமாறன் சமீப காலங்களாக நாவல்கள் மற்றும் சிறுகதைகளை தழுவி படம் எடுப்பதை அதிகரித்திருக்கிறார். அவரது இந்த செயல்பாடுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் அவர் வாடிவாசல் படம் மட்டுமின்றி விடுதலை என்ற படத்தையும் இயக்கிவருகிறார்.

மேலும் படிக்க | சாதியுடன் சேர்ந்ததுதான் அறிவு ஆனாலும் நிம்மதி இல்லை - ரஜினியின் விரக்தி பேச்சு

இதற்கிடையே வாடிவாசல் படத்தின் ஷூட்டிங்க் எப்போது தொடங்குமென்று பலரும் எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால், சூர்யா தற்போது வணங்கான் படத்திலும், வெற்றிமாறன் விடுதலை படத்திலும் பிஸியாக இருக்கின்றனர். எனவே இருவரும் கையில் இருக்கும் படங்களை முடித்துவிட்டுத்தான் வாடிவாசலுக்கு வருவார்கள் என தெரிகிறது.

Vaadivaasal

அதேசமயம் சில மாதங்களுக்கு முன்னதாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் செட் அமைத்து டெஸ்ட் ஷூட் செய்யப்பட்டது. இதில் சூர்யா, டாணாக்காரன் இயக்குநரும் நடிகருமான் தமிழ் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

மேலும் படிக்க | தமிழ் திரையுலகை இந்தியாவே திரும்பி பார்க்கிறது - தேசிய விருதாளர்களுக்கு கமல் பாராட்டு

இந்நிலையில் சூர்யா இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி வாடிவாசல் டெஸ்ட் ஷூட்டின் போது மாடுபிடி வீரர்களிடம் ஏறுதழுவுதல் தொடர்பான நுட்பங்களை சூர்யா கற்றுக்கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தை கலக்கிவருகிறது.

 

முன்னதாக, சூரரைப் போற்று படத்தில் நடித்ததால் அவருக்கு நேற்று தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நேற்று சூர்யா தேசிய விருதுக்கு தேர்வானது, இன்று வாடிவாசல் தொடர்பான வீடியோ வெளியானது என சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கின்றனர்.

மேலும் படிக்க | ’நாயகன் மீண்டும் வர’ விக்ரம் பீஜிஎம்மில் சூர்யாவுக்கு குவியும் வாழ்த்து - Video

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News