இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் எழுத்தில் அனிரூத் இசையமைத்திருக்கும் ’அரபிக் குத்து’ என்ற 'ஹலமிதி ஹபிபோ’ பாடல் வெளியட்ட சில மணிநேரங்களிலேயே மில்லியன் பார்வைகளைக் கடந்து இணையத்தை கலங்கடித்தது. அடுத்தடுத்த நாட்களில் உலகளவில் ஹிட் அடித்த இந்தப் பாடலுக்கு பலரும் நடனமாடி இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட தொடங்கினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரஷ்ய மொழியில் வெளியாகபோகும் கார்த்தியின் “கைதி” !


லேட்டஸ்டாக நடிகை சமந்தாவும் அரபிக் குத்து பாடலுக்கு நடமாடியுள்ளார். விமானநிலையத்தில் இருந்துவாறு இந்தப் பாடலுக்கு அவர் ஆடிய நடனம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது. பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே மற்றும் இசையமைப்பாளர் அனிரூத் ஆகியோர் அரபிக் குத்து பாடலுக்கு முதன்முதலாக நடனமாடி வெளியிட்ட வீடியோக்கள் வைரலாக பரவிய நிலையில், சமந்தாவும் அரபிக் குத்து நடனமும் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.



சமந்தாவின் இந்த நடனத்தை பார்த்த பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே, "Amazee" என ரியாக்ட் செய்துள்ளார். சமந்தாவுக்கும், பூஜா ஹெக்டேவுக்கும் இடையே ஏற்கனவே புகைச்சல் இருந்தது. சமந்தா குறித்து பூஜா ஹெக்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், இரண்டு நடிகைகளின் ரசிகர்களும் சமூக ஊடகத்தில் கடுமையாக மோதிக் கொண்டனர். பின்னர் இந்த விஷயம் குறித்து விளக்கமளித்த பூஜா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்தார். தற்போது அரபிக் குத்து பாடல் மூலம் அவர்களின் மனக்கசப்பு முடிவுக்கு வந்துள்ளது. 


மேலும் படிக்க | கைதி படத்தில் தான் பணிபுரிந்த அனுபவத்தை நினைவு கூர்ந்த இந்த நடிகர்


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் - பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி உலகளவில் ரிலீஸாக உள்ளதாக சன்பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. பூஜா ஹெக்டே நீண்ட இடைவெளிக்குப் பிறகு பீஸ்ட் மூலம் தமிழுக்கு திரும்புகிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR