பீஸ்ட் பாடல் செய்த சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் படத்தில் நடித்தார் விஜய். இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்திருந்தது.டாக்டர் படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் விஜய்யை இயக்கியதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு பல மடங்கு அதிகரித்தது. கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெளியான இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
விஜய் என்ற ஸ்டாரை நம்பிய நெல்சன் கதையிலும், திரைக்கதையிலும் கோட்டைவிட்டுவிட்டார் என்ற விமர்சனம் வெளிப்படையாகவே வைக்கப்பட்டது. மேலும், சமூக வலைதளங்களிலும் நெல்சன் திலீப்குமார் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். இருப்பினும் படம் 200 கோடி ரூபாயை வசூல் செய்துவிட்டதாக கூறப்பட்டது.
அதேசமயம், படம் சுமாராக இருந்தாலும் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அதிரிபுதிரி ஹிட்டடித்தன. அனிருத் இசையமைப்பில் அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கின்றன.
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது இதுவரை அந்தப் பாடலை யூட்யூபில் 200 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருக்கின்றனர் (20 கோடி பேர்). இதனைக் கொண்டாடும் விதமாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளையும், பாடல் உருவான விதத்தையும் வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்துவருகின்றனர். இந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கடைசி விவசாயிதான் எஞ்சாயி எஞ்சாமிக்கு முக்கிய காரணம் - விளக்கம் கொடுத்த தீ
மேலும் படிகக் | வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை: தொடரும் திரைத்துறை ரெய்டுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ