தமிழக அரசு திரையரங்குகளை 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி அளித்த சிறிது நிமிடங்களிலேயே பிளான் பண்ணி தியேட்டருக்கு வர தயாரா? என்ற வாசகத்துடன் விரைவில் 'பிளான் பண்ணி பண்ணனும்' படம் திரையரங்கில் வெளியாகும் என்று அப்படக்குழு அறிவித்துள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனோ இரண்டாம் அலையின் காரணமாக திரையரங்கில் மூடப்பட்டது.  அதன்பின் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் திரையரங்கு திறப்பு எப்போது என்று அறிவிப்பு வெளிவராமல் இருந்தது.  திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வரை சந்தித்து திரையரங்குகளை திறக்க கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதனையடுத்து இன்று மருத்துவ வல்லுநர்கள் உடன் முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் புதிய தளர்வுகளுக்கான அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.  அதன்படி தமிழகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  இந்த அறிவிப்பினால் திரையரங்கு உரிமையாளர்கள், நடிகர்கள், ரசிகர்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 



இந்நிலையில் திரையரங்கு திறக்கப்படும் என்ற அறிவிப்பு வந்த சிறிது நிமிடங்களிலேயே ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கும் பிளான் பண்ணி பண்ணனும் படம் விரைவில் திரையரங்கில் வெளியாகும் என்று அப்படக்குழு அறிவித்துள்ளது.  பத்ரி வெங்கடேஷ் இயக்கும் இப்படத்தில் ரம்யா நம்பீசன், டைகர் தங்கதுரை பாலா போன்றவர்கள் நடிக்கின்றனர்.  யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.   இப்படத்தின் டீசர் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் கூடியவரை இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ALSO READ OTT: செப்டம்பர் மாதத்தில் இவளோ படங்கள் ஓடிடி ரிலீசா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYe