ஒரே ரோலிற்கு இரண்டு விருது! ஆஸ்கார் விருதில் நடந்த சுவாரசியம்!
சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதினை பெற்ற முதல் ஆஃப்ரோ-லத்தீன் பெண் என்கிற பெருமையை நடிகை அரியானா டிபோஸ் பெற்றுள்ளார்.
அமரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் 94வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை அரியானா டிபோஸ் வென்றுள்ளார். இந்த விருதை பெற்றதன் மூலம் ஆஸ்கார் விருதினை பெற்ற முதல் ஆஃப்ரோ-லத்தீன் பெண் என்கிற பெருமையை பெற்றுள்ளார்.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய 'வெஸ்ட் சைட் ஸ்டோரி' படத்தின் ரீமேக்கில் நடித்ததற்காக டிபோஸ் இந்த விருதை வென்றுள்ளார். அதில் ஷார்க்ஸ் கும்பல் தலைவன் பெர்னார்டோவின் காதலி அனிதாவாக நடித்திருக்கிறார். மேலும் இதன் உண்மையான படத்தில் அனிதா கதாபாத்திரத்தில் நடிகை ரீட்டா மோரேனோ நடித்திருந்தார், இதன்மூலம் இவருக்கு 1962-ல் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருது கிடைத்தது. அந்த வகையில் மொரேனோவுக்குப் பிறகு ஆஸ்கார் விருதை வென்ற இரண்டாவது லத்தீன் நடிகை என்கிற பெருமை டிபோஸை சேர்கிறது.
டிபோஸ், மொரேனோவை பார்த்து, "நான் மிகவும் நன்றியுடன் இருப்பேன், உங்கள் அனிதா என்னைப் போன்ற பல அனிதாக்களை உருவாக்கியுள்ளது, நான் உன்னை நேசிக்கிறேன்" என்று கூறினார். அதனைத்தொடர்ந்து பேசியவர், நாம் வாழும் இந்த சோர்வான உலகில் கூட, நம்முடைய கனவுகள் நனவாகும், உண்மையில் அதுதான் நமக்கு மகிழ்ச்சியான விஷயம் என்று கூறினார். மேலும் ஆர் கூறுகையில், இப்போது கலை மூலம் வாழ்க்கையில் வலிமையாக நிற்கும் ஒரு ஓரினசேர்க்கையாளரை, ஆஃப்ரோ-லத்தீன் பெண்ணை நீங்கள் காண்கிறீர்கள். இந்த வெற்றியை தான் இங்கு கொண்டாடுகிறோம் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் இந்த படத்தில் நடித்ததற்காக பாஃப்டாஸ், கோல்டன் குளோப்ஸ் மற்றும் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் போன்ற விருதுகளை வென்றுள்ளார். இந்த 94-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில்
சிறந்த நடிகருக்கான விருது வில் ஸ்மித்திற்கம், சிறந்த நடிகைக்கான விருது ஜெசிகா சாஸ்டைனுக்கும் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியானது, தற்போது மூன்று பெண் தொகுப்பாளர்களை கொண்டு நடத்தப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR