பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க வம்சி பைடிபள்ளி படத்தை இயக்குகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதற்கான வேலைகள் தொடங்கி நடந்துவருகின்றன. ஏற்கனவே ம் மாஸ்டர் படம் ஹிட்டானதால் அடுத்தப் படம் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


 



பான் இந்தியா படமாக உருவாக இருப்பதால், படத்தில் வில்லனாக நடிக்க ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகரை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது. அதன்படி இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருத்திவிராஜ் ஆகியோர் இந்த பரிசீலனையில் தற்போது இருப்பதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் தமிழில் இருந்து அர்ஜுனை வில்லனாக நடிக்க வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இன்னொரு நாயகியாக சமந்தா பெயர் அடிபடுகிறது என்றும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | என் உள்ளத்தில் இருந்த தீதான் மருதநாயகம் வசனம் - கமல் ஹாசன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ