தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக விளங்குபவர், அர்ஜூன். ரசிகர்களால் ‘அக்ஷன் கிங்’ அர்ஜூன் என்று அழைக்கப்படும இவர், முன்னர் பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அவதாரம் எடுத்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தில் ஹரால்டு தாஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார், அர்ஜூன். இவரது மகள் ஐஸ்வர்யாவும் சில படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அர்ஜூனின் மகள்:


கோலிவுட் திரையுலகை பொருத்தவரை நடிகர்களாக இருப்பவர்களின் பிள்ளைகளும் திரையுலகிற்குள் பிரவேசிப்பதுண்டு. அப்படி, தந்தையை தொடர்ந்து சினிமாவிற்குள் நடிக்க வந்தவர், ஐஸ்வர்யா அர்ஜூன். 2013ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டத்து யானை’ படம் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் அதன் பிறகு பெரிதாக படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. இவரது தந்தையை ஏற்றுக்கொண்ட அளவிற்கு, ஐஸ்வர்யாவை தமிழ் திரையுலகம் ஏற்றுக்கொள்ளாதது, அவர் படங்களில் நடிக்காமல் போனதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. 


விரைவில் நிச்சயதார்த்தம்?


அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா ஒரு பிரபல நடிகரின் மகனை காதலித்து வருவதாகவும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கடந்த ஜூன் மாதமே தகவல்கள் பரவியது. ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள இருப்பவர் பெரிய தமிழ் நடிகரின் மகன் என்று இவரும் ஐஸ்வர்யாவும் பல வருடங்களாக காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த நடிகர் யார் தெரியுமா?


மேலும் படிக்க | ஜோதிகாவிற்கு இத்தனை கோடி சொத்துக்கள் இருக்கா..?



இவர்தான் அந்த நடிகரின் மகன்..


கோலிவுட் திரையுலகின் லெஜண்ட் குணச்சித்திர நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், தம்பி ராமையா. காமெடி கேரக்டராக இருந்தாலும் வில்லத்தனத்துடன் காமெடி செய்யும் கதாப்பாத்திரமாக இருந்தாலும் அப்படியே அசால்டாக நடித்து கொடுத்து விடுவார். இவரது மூத்த மகனான உமாபதியும் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். மனியார் குடும்பம், தண்ணி வண்டி, திருமணம் போன்ற படங்களில் இவர் ஹீரோவாக நடித்துள்ளார். உமாதிக்கும் ஐஸ்வர்யாவிற்கும்தான் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. 


விரைவில் நிச்சயதார்த்தம்:


அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவும் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் தங்கள் காதல் விஷயத்தை வீட்டில் கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இரு வீட்டாரும் தற்போது இவர்களின் திருமணத்தை நடத்தி வைக்க சம்மதித்து கிரீன் சிக்னல் கொடுத்துள்ளனர். நடிகர் அர்ஜூன், 2021ஆம் ஆண்டு சென்னையில் ஒரு ஆஞ்சநேயர் கோவிலை கட்டினார். இந்த கோவிலில் ஐஸ்வர்யா-உமாபதியின் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில், இரு வீட்டார், அவர்களின் உறவினர்கள் மற்றும் சில நெருங்கிய குடும்ப நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | கமல்ஹாசனுக்கு முதன் முறையாக ஜோடியான நயன்தாரா..! எந்த படத்தில் தெரியுமா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ