விஜய் நடிப்பில் உருவாகி வரும் #Thalapathy63 திரைப்படத்தின் இசையமைப்பு பணியை துவங்கிவிட்டதாக இசைப்புயல் AR ரகுமான் தெரிவித்து விஜய் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லியுடன் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் #Thalapathy63. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் யோகி, பாபு, கதிர், விவேக், ஆனந்த் ராஜ், இன்னும் பலர் நடித்து வருகின்றனர்.


பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில்  விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட கால் பந்தாட்ட மைதானம் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.



அவ்வப்போது படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வரும் வேளையில் சமீபத்தில் நடிகர் விஜய் இத்திரைப்படத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என உறுதியானது.
 
சென்னை அதன் சுற்றுவட்டார பகுதியில் இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை திரையிடப் படக்குழு முடிவு செய்திருக்கிறது.
 
AGS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் பாடல்களுக்கு இசை அமைக்கும் வேலையை துவங்கி விட்டதாக ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். 


இதில் அட்லி அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த செய்தி விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் இன்ப அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.