இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் தற்போது 'யானை' படத்தில் நடித்து வருகிறார்.  ஹரியின் வழக்கமான ஸ்டைலில் ஆக்சன் படமாக அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.  இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட் மற்றும் புகழ் ஆகியோர் நடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் பெயர் வெளியானது.  இந்த திரைப்படம் அருண் விஜய்க்கு 33-வது படமென்பதால் அதனை குறிக்கும் விதமாக, போஸ்டர் வெளியான போது 33 பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இந்த போஸ்டரை வெளியிட்டனர்.  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்முராக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் முக்கிய அப்டேட் டிசம்பர் -23ம் தேதியன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.  அதன்படி இன்று இப்படத்தின் டீசர் வெளியானது.



ராமேஸ்வரத்தின் பாம்பன் பாலத்தை காமிப்பதில் இருந்து ஆரம்பமாகும் இந்த டீசர் இது எப்படி பட்ட படம் என்பதை உணர்த்துகிறது.  பாம்பன் பாலம் ஒரு கடல், இரு கரை, ஒரு காதல், பெரும் துரோகம், ஒரு நட்பு, பெரும் பகை என்ற வசனத்துடன் டீசர் தொடங்குகிறது.  இதில் அருண் விஜய் கொட்டும் மழையில் வேஷ்டி, சட்டையில் கையில் விநாயகருடன் சாந்தமாக வருபவர் வில்லன்களுடன் சண்டையிடுகிறார்.  அதோடு இந்த படத்தின் டீசர் முடிவடைகிறது.  இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தொழிநுட்ப கோளாறு காரணமாக 10 நிமிடம் தாமதமாக வெளியானது.  அருண் விஜய்யும், ஹரியும் உறவினர்கள் என்பதால் இப்படத்தின் மேல் இயக்குனர் ஹரி கூடுதல் உழைப்பை கொடுத்துள்ளார் என்பது டீசரில் தெரிகிறது.  


 



ALSO READ | மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கப்போகும் எஸ்.ஜே.சூர்யா!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR