போர் தொழில் திரைப்படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்று என்ன தெரியுமா
Por Thozhil Censor: போர் தொழில் திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், `போர் தொழில்` திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை இந்துலால் கவீத் மேற்கொண்டிருக்கிறார். புலனாய்வு திரில்லர் ஜானரிலான இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் வருகிற ஜூன் 9 ஆம் தேதி தேதியன்று வெளியாகவிருக்க உள்ளது.
தொடர் கொலைகளை நிகழ்த்தும் குற்றவாளியை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு இளம் காவலரின் கதையாகும் போர் தொழில். இந்த படத்தில் அந்தக் காவலர், மூத்த காவலர் ஒருவருடன் கூட்டணி அமைத்து புலனாய்வு செய்து குற்றவாளியை நெருங்குகிறார். ஆக்சன், சஸ்பென்ஸ் என சுவராசியத்திற்கு குறைவில்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன் தயாராகி இருக்கும் போர் தொழில் திரைப்படம், தமிழ் திரையுலக ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று தனி முத்திரையைப் பதிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே கவனம் பெற்றது.
மேலும் படிக்க | Prabhas: திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ‘ஆதிபுருஷ்’ நடிகர்..!
இந்த நிலையில் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை போர் தொழில் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் தமிழ் திரையுலகின் இளம் கதாநாயகர்களுள் ஒருவரான அசோக் செல்வன் தமிழில் குறிப்பிடத்தக்க சில வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முகமாக இருந்து வருகிறார். இவர் முதன்முதலில் அஜித் நடிப்பில் வெளியான 'பில்லா 2' படத்தில் இளம் வயது பில்லாவாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'சூது கவ்வும்' படத்தில் அசோக் செல்வன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவருக்கு கதாநாயகனாக வாய்ப்பு கொடுத்து பல படங்கள் வரிசை காட்டியது. பீட்சா-2 வில்லா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார், அதனை தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே, 144, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழ் மொழிப்படங்கள் மட்டுமின்றி இவர் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படத்திலும் நடித்திருக்கிறார். வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் நடிகர் அசோக் செல்வன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் தென்னிந்திய சினிமாவில் இன்றைய அமையாத நடிகர்களில் ஒருவராக ஹீரோ மற்றும் வில்லன் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களின் மனதை கவரும் நடிகர் சரத்குமார். 2023 ஆம் ஆண்டில் தொடக்கத்தில் இவர் வாரிசு, ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து ருத்ரன், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி, அதேபோல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் எனும் பல முக்கிய கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் நடிகர் சரத்குமார். இதைத் தொடர்ந்து தற்போது இவர் கிரிமினல், தி ஸ்மைல் மேன், பரம்பொருள், நிறங்கள் என்கிற மூன்று திரைப்படத்தில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ