அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கரின் லூட்டி! ஹாஸ்டல் திரைவிமர்சனம்
அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடித்த ஹாஸ்டல் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான அடி கப்யாரே கூட்டமணி என்ற ஹாரர் கலந்த காமெடி படத்தின் தமிழ் ரீமேக்தான் ஹாஸ்டல் திரைப்படம். இந்த படத்தில் அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர், சதீஷ், நாசர், முனீஸ்காந்த் போன்றோர் நடித்துள்ளனர். சுமந்த் ராதாகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார், மேலும் ரவீந்திரன் இந்தப் படத்தை தமிழில் தயாரித்துள்ளார். அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மன்மதலீலை படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது, அதன் தொடர்ச்சியாக தற்போது ஹாஸ்டல் திரைப்படம் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | கதிஜாவா? கண்மணியா? காத்துவாக்குல ரெண்டு காதல் ரிவியூ!
கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் அசோக் செல்வன் தனது நண்பர்களுடன் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த விடுதிக்கு முன்னாள் ராணுவ அதிகாரி நாசர் தலைமை தாங்குகிறார். மிகவும் ஒழுக்கமாக பசங்களை வளர்ப்பதாக அவரே சொல்லி கொள்கிறார். அந்த விடுதியில் ஒருநாள் இரவு மட்டும் பிரியா பவானி சங்கர் தன்னை தங்க வைக்குமாறு அசோக் செல்வன் இடம் கூறுகிறார், அவரும் பிரியாவை ஹாஸ்டெலுக்குள் யாருக்கும் தெரியாமல் கூட்டி வருகிறார். ஹாஸ்டலுக்குள் வரும் பிரியா பவானி சங்கர் அங்கிருந்து யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் எப்படி வெளியேறினார் என்பதே ஹாஸ்டல் படத்தின் கதை. மலையாளத்தில் வெளியான படத்தை, தமிழ் மக்களுக்கு ஏற்ப எடுத்துள்ளனர். அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஜோடி பார்ப்பதற்கு புது விதமாக, அழகாக உள்ளது. அசோக் செல்வனின் நண்பர்களாக வரும் சதீஷ் மற்றும் அவர்களது கூட்டாளிகள் செய்யும் சேட்டைகள் சில இடங்களில் ரசிக்கும்படியாக உள்ளது.
ஹாஸ்டல் படத்தை மொத்தமாக தாங்கிப் பிடிப்பது நாசர் மற்றும் முனிஸ்காந்த் தான். இருவருக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி பல இடங்களில் சிரிக்க ரசிக்க வைக்கிறது. ஒவ்வொரு முறையும் முனிஸ்காந்த் நாசரை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு ரூமாக சோதனை செய்யும் காட்சிகள் சிரிக்கும் படியாக உள்ளது. ஒவ்வொரு முறையும் பிரியா பவானி சங்கர்-ஐ மறைக்க அசோக் செல்வன் போராடும் காட்சிகள் நன்றாகவே உள்ளது. இரண்டாம் பாதியில் பேயாக வரும் நிஷா தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக முடித்துள்ளார், சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். பேசியிடம் சிக்கி சின்னாபின்னாமாகும் முனீஸ்காந்த் கைதட்டுகளை அள்ளுகிறார்.
ரவி மரியா மற்றும் அவரது கூட்டாளிகள் செய்யும் சேட்டைகள் ஆங்காங்கே சிறிது சிரிப்பை வரவழைக்கிறது. கிளைமாக்ஸில் பேயை விரட்ட நினைத்து நாசர் பேயிடம் மாட்டி கொள்ளும் காட்சி ரசிக்கும் படியாக இருந்தது. படம் முழுக்க டபுள் மீனிங் வசனங்கள் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. இளைஞர்களை மையமாக வைத்து எடுத்துள்ளதால் இந்த முடிவில் படக்குழு இறக்கியது போல் தெரிகிறது. கேமரா, இசை, படத்தொகுப்பு அனைத்தும் தேவைக்கு ஏற்றார் போல் உள்ளது. மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்த இந்த படத்திற்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் கூடுதல் சிறப்பாகவே உருவாகியிருக்கும்.
[Credits : Rajadurai Kannan]
மேலும் படிக்க | தளபதி 66ல் மிஸ் ஆகும் மாஸ்?... கவலையில் ரசிகர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR