E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், 'போர் தொழில்' எனும் திரைப்படத்தினைத் தயாரித்திருப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாக தடம் பதிக்கிறது. சமீபத்தில் போர் தொழில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், வெளியீட்டு தேதியையும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் போர் தொழில் திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் காவலர்களாக நடித்திருக்கும் அசோக் செல்வன் மற்றும் ஆர். சரத்குமார் ஆகியோர்களின் வித்தியாசமான தோற்றம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புலனாய்வு திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் 'போர் தொழில்' எனும் திரைப்படத்தில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிக்கிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர் கொலைகளை நிகழ்த்தும் குற்றவாளியை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு இளம் காவலரின் கதையாகும். போர் தொழில் படத்தில் அந்தக் காவலர், மூத்த காவலர் ஒருவருடன் கூட்டணி அமைத்து புலனாய்வு செய்து குற்றவாளியை நெருங்குகிறார். ஆக்சன், சஸ்பென்ஸ் என சுவராசியத்திற்கு குறைவில்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன் தயாராகி இருக்கும் போர் தொழில் திரைப்படம், தமிழ் திரையுலக ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று தனி முத்திரையைப் பதிக்கும்.


மேலும் படிக்க | பல கோடிகளுக்கு அதிபதி... ஆனாலும் சரத்பாபுவின் கடைசி ஆசை நிறைவேறவில்லையா? - முழு விவரம்


இந்த நிலையில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இருவரும் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் போர் தொழில் திரைப்படத்தின் டீசர் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் போர்த் தொழில் திரைப்படத்தின் டீசர் இதோ…




போர் தொழில் படத்தை அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் இ4 எக்ஸ்பிரிமெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் போர் தொழில் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்கிறார். பிரபல இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த போர் தொழில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. மேலும் போர் தொழில் திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


தென்னிந்திய சினிமாவில் இன்றைய அமையாத நடிகர்களில் ஒருவராக ஹீரோ மற்றும் வில்லன் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களின் மனதை கவரும் நடிகர் சரத்குமார். 2023 ஆம் ஆண்டில் தொடக்கத்தில் இவர் வாரிசு, ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து ருத்ரன், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி, அதேபோல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் எனும் பல முக்கிய கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் நடிகர் சரத்குமார். இதைத் தொடர்ந்து தற்போது இவர் கிரிமினல், தி ஸ்மைல் மேன், பரம்பொருள், நிறங்கள் என்கிற மூன்று திரைப்படத்தில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | மறைந்த நடிகர் சரத்பாபுவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நடிகர் சூர்யா & கார்த்தி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ