8 தோட்டக்கள் இயக்குனரின் 'குருதி ஆட்டம்' படத்தில் நடித்து வரும் அதர்வா, அதில் தீவிர அஜித் ரசிகராக நடித்து வருவதாக தகவல்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு அதர்வா தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், முதன்முதலாக 'செம போதை ஆகாத' படத்தை தயாரித்தார். அதன் பிறகு நயன்தாராவுடன் அவர் நடித்த 'இமைக்கா நொடிகள்' படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. 


இதையடுத்து, '8 தோட்டாக்கள்' படம் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர் இயக்குநர் ஸ்ரீகணேஷ். முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது தனது அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்திக்கு குருதி ஆட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கிறார்.


தற்போது '8 தோட்டாக்கள்' இயக்குனர் சாய் கணேஷின் 'குருதி ஆட்டம்' படத்தில் அதர்வா நடித்து வருகிறார். திரைப்படத்தின் ஷூட்டிங், இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. ராக் போர்ட் என்டெர்டைன்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ பி கார்த்திகேயன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். மதுரை மாநகரின் பின்னணியில் கமர்சியல் மற்றும் திரில்லர் பாணியில் படம் உருவாகி வருவதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.


அந்த படத்தில் அதர்வா நடித்துள்ள கேரக்டர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கபடி வீரராக நடித்துள்ள அதர்வா, மருத்துவமனையில் வார்டு பாயாகவும் தோன்றுகிறாராம். ஆழ்வார் படத்தில் அஜித் வார்டு பாயாக நடித்த நிலையில், இந்த படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராகவும் அதர்வா நடித்துள்ளார் என கூறப்படுகிறது. குருதி ஆட்டத்தில், கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் ராதிகா, ராதாரவி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.