முக்கிய உடற்பயிற்சி இலக்குகளை வழங்கும் Athulya Ravi இன் லேட்டஸ்ட் வீடியோ
அதுல்யா ரவி குடும்பப்பெண் வேடங்களில் நடித்து தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.
அதுல்யா ரவி (Athulya Ravi) குடும்பப்பெண் வேடங்களில் நடித்து தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானர். அதை தொடர்ந்து ஏமாலி (2018), நாடோடிகள் 2 (2019) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி இருக்கிறார் நடிகை அதுல்யா ரவி.
சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி இருக்கும் நடிகை அதுல்யா ரவி (Athulya Ravi) இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் மிக தாராளமாக கவர்ச்சி காட்ட தயாராகி வருகிறார்.
ALSO READ | 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் டிரெயிலர் வெளியீடு!!
இவரது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரையும் அசர வைத்த தோடு ரசிகர்களின் உற்சாகத்தையும் பெற்று வருகிறார்.
அதுல்யா ரவி அடுத்து 'என் பெயர் ஆனந்தன்' படத்தில் நடிக்கவுள்ளார், மேலும் இப்படத்தில் சந்தோஷ் பிரதாப்புக்கு ஜோடியாக நடிக்கிறார். சாந்தனுவுடன் தனது அடுத்த 'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தையும் அறிவித்தார், மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR