சண்டக்கோழி-2 இசை உரிமையை பெற்றது சோனி மியூசிக்!
கடந்த 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண் ஆகியோர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சண்டக்கோழி.
கடந்த 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண் ஆகியோர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சண்டக்கோழி.
முதல் பாகத்தின் ஹிட்-க்குப் பிறக இரண்டாம் பாகம் துவக்கப்படுவதாக இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக கூறி இருந்தார்.
அந்த வகையில் இந்த இரண்டாம் பாகத்திலும் ராஜ்கிரண் நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடம் ஏற்கின்றனர். இது விஷாலின் 25-வது படமாகும். இவர்களுடன் வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "விஷால் ஃபிலிம் ஃபேக்டரி" மூலம் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது, இப்படத்தின் இசை உரிமையினை "சோனி மியூசிக் சவுத்" வென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்!
முன்னதாக, இப்படத்தை இந்தாண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது!