அவதார் 2 திரைப்படம் டிச. 16ஆம் தேதி வெளியானது.அவதார் படத்தின் முதல் பாகம் 2009ஆம் ஆண்டு டிச. 18ஆம் தேதி வெளியாகி பிரம்மாண்டு வெற்றியை பெற்றது. இதையடுத்து, சுமார் 13 ஆண்டுகள் கழித்து, அதே ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகம் முழுவதும் 2D, 3D, IMAX ஃபார்மட்களில் வெளியாகியுள்ளது. அவதார் 2 திரைப்படம் இந்தியாவிலும் உலகெங்கிலும் அதன் முதல் பாகத்தை போலவே விமர்சகர்களிடம் இருந்து சிறப்பான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. குடும்ப வாழ்வு குறித்து மிகப்பெரும் கதையாடலில் உருவாகியுள்ள இத்திரைப்படம், குடும்பங்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிரம்மாண்ட காட்சிகள், த்ரூபமான கிராப்கிஸ் உள்ளிட்டவையும் படத்திற்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. 


மேலும் படிக்க | நான் அப்படி படுக்கும் ஆள் இல்லை - நயன்தாரா சொன்ன ஷாக் தகவல்


இதனால், இந்தியாவில் திரையரங்குகளில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. தொடர்ந்து, படம் ரிலீஸ் ஆன ஆறே நாள்களில் பல்வேறு சாதனைகளை குவித்து வருகிறது. பாலிவுட்டில் பல பெரிய பட்ஜெட் படங்கள் இந்தாண்டு தோல்விக்கண்ட நிலையில், பூல் பாலையா 2, திரிஷ்யம் 2, கங்குபாய், காஷ்மீர் ஃபைல்ஸ் உள்ளிட்ட படங்கள்தான் வெற்றி பெற்றன. லால் சிங் சத்தா, ரக்ஷாபந்தன், சாம்ராட் பிர்த்விராஜ் உள்ளிட்ட எதிர்பார்க்கப்பட்ட படங்களும் படுதோல்வியை சந்தித்தன.  


இருப்பினும், பூல் பாலையா 2 திரைப்படம் மொத்தமாகவே 186 கோடி ரூபாயைதான் வசூலித்திருந்தது. இந்நிலையில் அவதார் 2 திரைப்படம், பூல் பாலையாவின் ஒட்டுமொத்த வசூலையும் ஒரே வாரத்தில் முறியடிக்க உள்ளது. மேலும், 200 கோடி ரூபாய் வசூலை நோக்கி சென்றுவருகிறது. 


இந்தியாவில் அவதார் 2 திரைப்படம் நாள் வாரியாக :


  • டிச. 16 - 40 கோடி ரூபாய்

  • டிச. 17 - 42.5 கோடி ரூபாய்

  • டிச. 18 - 46 கோடி ரூபாய்

  • டிச. 19 - 18.6 கோடி ரூபாய்

  • டிச. 20 - 16.63 கோடி ரூபாய் 


மேலும், இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களில் அதிக வசூலை குவித்த பட்டியலில் 40 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது. முதல் இடத்தில் உள்ள அவஞ்சர்ஸ் End Game திரைப்படம் 53 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும், ஜேம்ஸ் கேம்ரூனின் அவதார் 2 திரைப்படம் அமெரிக்கா தவிர்த்து வெளிநாடுகளில் சீனா, தென் கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றை தொடர்ந்து இந்தியாவும் அதிக வசூலை குவித்து வருகிறது. 


மேலும் படிக்க | ரெய்டிற்கு பிறகு பம்மிவிட்டாரா?... விஜய்யை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ