ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் அனைவரின் கவனத்தை பெற்றதை அடுத்து, இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவதார் படத்தின் இரண்டாம் பாகம்  டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த நாளுக்காக உலக முழுவதும் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் மற்றொரு டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது மட்டுமின்றி, இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 22) முதல் இந்தியாவில் துவங்குகிறது. இந்தியாவில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


ஏற்கனவே அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் சில ட்ரெய்லர்கள் வெளியிடப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் புதிய டிரெய்லரை வெளியிடப்பட்டுள்ளது. கடல் மற்றும் கடலுக்கு அடியில் காட்டப்படும் காட்சிகள் மற்றும் நீல நீர்வீழ்ச்சி டிராகன்களுடன் கூடிய காட்சிகள் என ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.


 



மேலும் படிக்க: ’வாரிசுக்கு இதை செய்ய வேண்டாம்’ ரசிகர்களுக்கு விஜய் சொன்ன 2 முக்கியமான விஷயம்!


13 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அவதார் 2 என அழைக்கப்படும் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (Avatar: The Way of Water) இறுதியாக டிசம்பர் 16 அன்று திரையரங்குகளில் வரவுள்ளது. 


இப்படத்தில் படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ், ஜோயல் டேவிட் மூர், சிசிஎச் பவுண்டர், எடி ஃபால்கோ, ஜெமைன் கிளெமென்ட் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர். அவதார் 2 க்கான திரைக்கதையை உருவாக்க 13 வருடங்கள் ஆகின என படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் 


மேலும் படிக்க: வசூலில் தெறிக்கவிடும் சமந்தாவின் ‘யசோதா’; 9 நாள் பிரமாண்ட கலெக்சன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ