அவதார் 2 முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? - ஆனாலும் அந்த படத்தை முந்தவில்லை...
நேற்று வெளியான அவதார் 2 திரைப்படத்தின் இந்திய அளவிலான முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த அவதார் 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அவதார் படத்தின் முதல் பாகம் 2009ஆம் ஆண்டு டிச. 18ஆம் தேதி வெளியாகி பிரம்மாண்டு வெற்றியை பெற்றது. இதையடுத்து, சுமார் 13 ஆண்டுகள் கழித்து, அதே ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் 2D, 3D, IMAX ஃபார்மட்களில் வெளியாகியுள்ளது. அவதார் 2 திரைப்படம்இந்தியாவிலும் உலகெங்கிலும் அதன் முதல் பாகத்தை போலவே விமர்சகர்களிடம் இருந்து சிறப்பான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் டிக்கெட்டுகளின் விலை வழக்கத்தை விட சற்று கூடுதலாக உள்ளது என கூறப்படுகிறது. இருப்பினும், மக்கள் இப்படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, சாதாரண ஐமேக்ஸ் டிக்கெட்டின் விலை ரூ. 2500 ஆக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | அவதார் 2 ரிலீஸ் : அடம்பிடித்த டிஸ்னி... புறக்கணித்த திரையரங்குகள் - நிலவரம் என்ன?
இந்திய பாக்ஸ் ஆபிஸில், அவதார் 2 திரைப்படம் ஒரு சிறந்த தொடக்கத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய இப்படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ. 41 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மார்வல் படங்களான 'அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்' மற்றும் 'ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்' ஆகிய படங்களின் முதல் நாள் வசூலை இந்தப் படம் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல் நாளில் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் திரைப்படம் ரூ. 31 கோடியும், ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் திரைப்படம் ரூ. 32 கோடியும் வசூலித்திருந்தது. ஆனால், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படம் ரூ. 53 கோடி ஓப்பனிங் மூலம் அனைத்தையும் விட வசூலில் முதலிடத்தில் உள்ளது. இவையனைத்தும் இந்தியா அளவிலான நிலவரம் மட்டுமே.
ஆனால், அவதார் 1 திரைப்படம்தான் உலகத்திலேயே தற்போதுவரை அதிக வசூல் செய்த திரைப்படமாகும். அந்த திரைப்படம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் வசூல் செய்துள்ளது.
முதல் பாகத்தை போலவே, ஜேம்ஸ் கேம்ரூன் இப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, படத்தொகுப்பும் செய்துள்ளார். எழுத்து, தயாரிப்பு பலரின் பங்களிப்புடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்லது. தொடர்ந்து, ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | துணிவு Vs வாரிசு... எனக்கு பயமாக இருக்கிறது - சரண்டர் ஆன தில்ராஜு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ