2024 புத்தாண்டு தொடங்கி ஒரு வாரம் முடிந்துள்ளது.  இந்த ஆண்டு தென்னிந்திய சினிமாவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, ஜூனியர் என்டிஆரின் தேவாரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரனின் ஆடுஜீவிதம், விஜய்யின் தளபதி 68, அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் வேட்டையன் போன்ற பல எதிர்பார்க்கப்பட்ட படங்கள் ஏற்கனவே தங்கள் ரிலீஸ் தேதிகளை அறிவித்துள்ளன. இது ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கின்றன.  அதே போல பொங்கல் மற்றும் சங்கராந்தி தினத்தில் தென்னிந்திய படங்கள் ஜனவரி 12 அல்லது 13 ஆம் தேதிகளில் வெளியாக உள்ளன.  இதில் பல பெரிய ஹீரோ படங்களும் அடங்கும்.  துரதிர்ஷ்டவசமாக, ரவி தேஜா நடித்த Eagle மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் போன்ற ஓரிரு படங்கள் பொங்கல் ரேஸில் இருந்து வெளியேறி உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Poornima Ravi:16 லட்சத்துடன் வெளியேறிய பூர்ணிமா..பிக்பாஸில் மொத்தமாக சம்பாதித்தது எவ்வளவு?


அயலான் - Ayalaan 


ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படமான அயலான் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது வெளியாக உள்ளது. இப்படம் அறிவியல் சாகசங்கள் நிறைந்த ஆக்‌ஷன் என்டர்டெயினராக அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, ஷரத் கேல்கர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிரகத்தைக் காப்பாற்றும் நோக்கத்துடன் பூமிக்கு வரும் வேற்றுகிரகவாசியைச் சுற்றி படம் நகர்கிறது.  இப்படத்தை கேஜேஆர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா படத்தின் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.


மிஷன் : அத்தியாயம் 1 - Mission Chapter 1


அருண் விஜய்யின் நடிப்பில் உருவாகி உள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் படம் மிஷன்: அத்தியாயம் 1. ஏ.எல்.விஜய் இயக்கிய இப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், நிக் கான், டைகோரா ஸ்மித் மற்றும் பலர் நடித்துள்ளனர். நோய்வாய்ப்பட்ட தனது மகளை சந்திப்பதற்காக எல்லா தடைகளையும் மீறி தப்பிக்க முயலும் ஒரு கைதியை சுற்றி கதை நடக்கிறது.  லைகா புரொடக்‌ஷன்ஸ் கே சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளார், ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 


கேப்டன் மில்லர் - Captain Miller


ராக்கி புகழ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் வரவிருக்கும் பீரியட் ஆக்ஷன் படம் கேப்டன் மில்லர். இப்படத்தில் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், நாசர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 1930களின் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  நேற்று வெளியான படத்தின் ட்ரைலர் மேலும் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.  கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. மேலும் ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 


குண்டூர் காரம் - Guntur Kaaram


திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்திருக்கும் அதிரடி ஆக்சன் படமான குண்டூர் கரம் படம் சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாகிறது. இப்படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளது.  மேலும் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக உள்ளது.  இப்படத்திற்கு தமன் எஸ் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா மற்றும் பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.


ஹனுமான் - HanuMan 


பிரசாந்த் வர்மாவின் சூப்பர் ஹீரோ படமான ஹனுமான் படம் இந்த சங்கராந்திக்கு வெளியாகிறது.  படத்தில் தேஜா சஜ்ஜா கதாநாயகியாக நடித்து உள்ளார். மேலும், இப்படத்தில் அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஞ்சனாத்ரி என்ற கற்பனைக் கிராமத்தில் இந்தப் படம் நடப்பதாகத் தெரிகிறது, மேலும் இந்த படம் வரவிருக்கும் பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸில் முதல் பாகமாக இருக்கும். உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாகும் இப்படத்தை பிரைம்ஷோ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த படங்களை தாண்டி வெங்கடேஷ் டக்குபதி நடித்துள்ள சைந்தவ், நாகார்ஜுனா நடித்துள்ள நா சாமி ரங்கா ஆகிய படங்களும் வெளியாகிறது.  


மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 7ல் இத்தனை காதல் புறாக்களா? மணி-ரவீனா, பூர்ணிமா-விக்ரம்..லிஸ்ட் பெரிசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ