பிக்பாஸ் சீசன் 7ல் இத்தனை காதல் புறாக்களா? மணி-ரவீனா, பூர்ணிமா-விக்ரம்..லிஸ்ட் பெரிசு!

Bigg Boss Season 7 Tamil: விறுவிறுப்பாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலர் காதல் புறாக்களாக பறந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Oct 24, 2023, 08:31 PM IST
  • பிக்பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
  • இதில் பல காதல் புறாக்கள் சுற்றி வருகின்றனர்.
  • அவர்கள் யார் யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 7ல் இத்தனை காதல் புறாக்களா? மணி-ரவீனா, பூர்ணிமா-விக்ரம்..லிஸ்ட் பெரிசு!  title=

சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது வெற்றிகரமாக ஓடி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 7. பல பலமான போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த போட்டியில் இருந்து இதுவரை 3 பேர் வெளியேறியுள்ளனர். ஆனாலும், இந்த பிக்பாஸ் வீட்டில் சிலர், காதல் புறாக்களாக பறந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா? 

மணி-ரவீணா:

தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக வந்து, பின்னர் சின்னத்திரை பிரபலமாக மாறியவர் ரவீணா தாஹா. இவர், மெளன ராகம் தொடரின் 2வது சீசனில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். 19வயதாகும் இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் முக்கிய பங்கேற்பாளராக இருந்து ரசிகர்களை மகிழ்வித்தார். ரியாலிட்டு ஷோக்கள் மூலம் நடனமாடி பிரபலமானவர், மணிசந்திரா. இவரும் ரவீணாவும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து கொண்டனர். அதிலிருந்து இருவரும் ஒன்றாக சுற்றி வருகின்றனர். இந்த நிலையில், மணியும் ரவீணாவும் ஒன்றாக பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்தனர். ஒவ்வொரு போட்டியாளரும் அவரவர் கேமில் கவனம் செலுத்தினாலும் இவர்கள் இருவர் மட்டும் ஒன்றாகவே விளையாடி வருவதாக சக ஹவுஸ் மேட்ஸ்கள் பல நேரங்களில் கூறி வருகின்றனர். இவர்கள் இருவரும் தாங்கள் இன்னும் காதலிக்கவில்லை, நண்பர்கள்தான் என்று கூறினாலும் இவர்கள் செய்யும் சில செயல்கள் காதலர்கள் போல உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

Bigg Boss 7 Tamil

மாயா-விஜய் வர்மா:

‘விக்ரம்’ படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர், மாயா கிருஷ்ணன். இவர், நாடக கலைஞராகவும் துணை நடிகையாகவும் வலம் வருகிறார். பிக்பாஸ் வீட்டில் உள்ள பலமான போட்டியாளர்களுள் இவரும் ஒருவர். பிக்பாஸ் போட்டியின் இந்த சீசனில் கடைசியாக நுழைந்த போட்டியாளர், விஜய் வர்மா. இவர் மீது மாயாவிற்கு க்ரஷ் உள்ளதாக கூறப்படுகிறது. விஜய், ஆரம்பத்தில் நன்றாக விளையாடினாலும் சக போட்டியாளரான விஷ்ணுவிற்கு நேரடியாக மிரட்டல் விடுத்தார். அதனால் இவருக்கு ஸ்ட்ரைக் காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த வாரம் இவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறினார். அவர் வெளியே போவதற்கு முன்னர் மாயா அவரது காதில் எதையோ கூறினார். இவர்கள் ஒன்றாக வீட்டில் இருந்த சமயங்களிலும் ஒன்றாக சில சமயங்களில் சுற்றினர். 

மேலும் படிக்க | பிக்பாஸில் ரெட் கார்டு காண்பித்து வெளியேற்றப்பட்ட ‘அந்த’ நபர்..! யார் தெரியுமா..?

பூர்ணிமா-விக்ரம்:

சீரியல் நடிகரான சரவண விக்ரம், பிக்பாஸ் 7 போட்டியின் பலமான போட்டியாளர்களுள் ஒருவராக பார்க்கப்படுகிறார். இவரது கேப்டன்ஸி மற்றும் பேசும் தொனி ஆகியவை ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. யூடியூப் பிரபலமான பூர்ணிமாவும் இந்த பிக்பாஸ் போட்டியின் முக்கிய ஹவுஸ்மேட் ஆக இருக்கிறார். இவர், தனக்கு இந்த பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும் ஆண்களிலேயே சரவண விக்ரமைத்தான் பிடிக்கும் என மாயாவிடம் ஒரு முறை கூறினார். தற்போது விக்ரம் மற்றும் பூர்ணிமா ஆகிய இருவருமே அதிக நேரத்தை ஒன்றாக செலவிட்டு வருகின்றனர். இன்று, இவர்கள் இருவரும் ஒன்றாக பேசிக்கொண்டிருக்கையில் விக்ரம், தனது மைக்கை மறைத்து விட்டு பேசினார். இதற்கு பிக்பாஸ் கண்டனம் தெரிவித்தார். 

ஐஷூ-நிக்ஸன்:

நடன இயக்குனரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான அமீரின் தங்கை ஐஷூ, இந்த சீசன் பிக்பாஸில் நுழைந்துள்ளார். இவர், ஆரம்பத்தில் யாருடனும் பெரிதாக பேசவில்லை. தனக்கு முன்கூட்டிய தெரிந்த மணி மற்றும் ரவீணாவிடம் மட்டும் நெருங்கி பழகி வந்தார். ஆனால், கடந்த 4 நாட்களாக இவர் நிக்ஸனிடம் கொஞ்சம் நெருக்கம் காட்டி வருகிறார். தமிழ் பாடல்களை ராப் செய்து பாடும் நிக்ஸனும் இவரிடம் நெருக்கம் காட்டுகிறார். ஆனால் இவர்கள் தனித்தனியே பேசிக்கொள்ளும் போது நிக்ஸன், தான் டைம் பாஸிற்காகத்தான் இப்படி பேசுவதாக கூறினார். ஐஷூவும் தான் நிக்ஸனை தம்பி போல்தான் பார்ப்பதாகவும் கூறினார். 

மேலும் படிக்க | பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கும் ‘அந்த’ பாேட்டியாளர் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News