ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாடம்: ஜீ தமிழ் சேனலில் என்ன ஸ்பெஷல்? லிஸ்ட் இதோ!
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ்.
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ், எப்போதும் வித்தியாசமான கதைகளை கொண்ட சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக தொடர்ந்து மக்களை எண்டெர்டைன் செய்து வருகிறது.
அதே போல் பண்டிகை தினங்களிலும் முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சிகள், புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவதிலும் கவனத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமிக்கு என்னவெல்லாம் ஸ்பெஷல் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ஆயுத பூஜையான அக்டோபர் 23-ம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. அதாவது குடும்பத்தில் சிக்கனத்தை கையாளும் பொறுப்பு யாருக்கு அதிகம் கணவனுக்கா? மனைவிக்கா என்ற தலைப்பில் ஒளிபரப்பாக உள்ளது.
அதனை தொடர்ந்து 10.30 மணிக்கு ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் குடும்ப பாசத்தை கொண்டாடும் படமாக வெளியாகி வெற்றி பெற்ற யானை திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த படம் முடிந்ததும் மதியம் 1.30 மணிக்கு சந்தானத்தின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஹாரர் காமெடி திரைப்படமான DD ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. பேய்களுடன் சந்தானம் செய்யும் கலாட்டா உங்களை நிச்சயம் குஷியாக்கும் என நம்பலாம்.
மேலும் படிக்க | லியோ படத்தில் விஜய்யை அடுத்து அதிக சம்பளம் வாங்கியது யார்..?
அடுத்ததாக மாலை 4 மணிக்கு இங்கிலிஷ் பேசினாலும் தமிழன்டா என்ற கேம் ஷோ ஒளிபரப்பாக உள்ளது. 8 சின்னத்திரை ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர் ஜே விஜய் மற்றும் பரீனா ஆகியோர் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளனர். இவர்களுடன் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். சிங் இன் தி ரெயின், வெயிலோடு விளையாடு, மகா நடிகை என பல மாறுபட்ட ரவுண்டுகளுடன் உங்களை பக்கா என்டர்டைன் செய்ய உள்ளனர்.
மறுநாள் விஜயதசமி நாளில் குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாவது திருமணத்திற்கு முன்பா? பின்பா என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. தொடர்ச்சியாக 10.30 மணிக்கு பாட்டு பாடவா? ஆட்டம் போடவா? என்ற என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அர்ச்சனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் சரிகமப மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் பிரபலங்கள் இணைந்து பங்கேற்க உள்ளனர். ஆடல் மற்றும் பாடலை மையமாக வைத்து பல வித்தியாசமான ரவுண்டுகளுடன் இந்த நிகழ்ச்சி களைகட்ட உள்ளது.
இறுதியாக மதியம் 3.30 மணி முதல் சத்யராஜ் மற்றும் அஜ்மல் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாக தீர்க்கரசி திரைப்படம் உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஜீ தமிழ் ஒளிபரப்பாக உள்ளது.
இப்படி முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்களுடன் இந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தினத்தை உங்கள் ஜீ தமிழுடன் கொண்டாட தயாராகுங்கள்.
மேலும் படிக்க | டி.இமான் பிரச்சனையால் பட வாய்ப்புகளை இழக்கும் சிவகார்த்திகேயன்..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ