விக்கி டோனார் படம் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது புற்றுநோயால் பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகிறது. மனிஷா கொய்ராலா, கிரிக்கெட் வீரர் யுவராஜ், இர்பான் கான், சோனாலி என பிரபலங்கள் சிலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து குணமாகி வருகின்றனர்.


இந்நிலையில், தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவின் மனைவி தஹிராவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் ஒரு நீண்ட பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.