இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை ‘பாகுபலி 2’ வெறும் 7 நாட்களிலேயே எட்டியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏப்ரல் 28-ம் தேதி 4 மொழிகளில் வெளியான படம் ‘பாகுபலி 2’. மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.  


இந்நிலையில் ‘பாகுபலி 2’ படம் வெளியான 7 நாட்களில் சுமார் 700 கோடி வசூலை எட்டியுள்ளது. இந்தியளவில் அதிக வசூல் செய்த ‘தங்கல்’ படத்தின் சாதனையை முறியடித்து, இந்தியளவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை எட்டியுள்ளது ‘பாகுபலி 2’. இதனை 'பாகுபலி' படத்துக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்கள். 


 



 


உலகளவில் அதிக வசூல் செய்த இந்திய படம் ‘பி.கே’ சாதனையை விரைவில் முறியடிக்கும் என்று கணித்துள்ளார்கள்.


‘பாகுபலி 2’ படத்துக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள்.