எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் நாளை வெளியாக இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாகி புதிய சாதனை படைக்க உள்ளது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 2500 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1100 திரையரங்குகளிலும், இதர நாடுகளில் 1400 திரையரங்குகளிலும் பாகுபலி 2 வெளியாக உள்ளது. 


இந்நிலையில் படம் ரிலீசாவதற்கு முன்பாக நேற்று இப்படத்தின் 2 நிமிடக் காட்சி இணையதளங்களில் லீக் ஆகி அதிர்ச்சி அளித்துள்ளது. இதற்கு முன்பாக எடிட்டிங் பணியின் போது, ஒருசில படங்கள் வெளியாகி அதிர்ச்சியளித்தது முதல் பல்வேறு இன்னல்களை படக்குழு சந்தித்து வருகிறது. 


இந்நிலையில் `பாகுபலி 2' படத்தில் இடம்பெறும் போர் உள்ளிட்ட 2 நிமிட சண்டைக் காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதன் படங்களும் வெளியாகி இருக்கிறது. இதனை வெளியிட்டது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.