பாஸ்கர் சக்தியின் ரயில் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
Rail Movie Review: பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வேடியப்பன் தயாரிப்பில் உருவாகியுள்ள ரயில் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Rail Movie Review: தயாரிப்பாளர் வேடியப்பன் தயாரிப்பில் தேனிஈஸ்வர் ஒளிப்பதிவில் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரயில். இந்த படத்திற்கு முதலில் வடக்கன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பின்பு சென்சார் போர்டு இந்த தலைப்பை மாற்றுமாறு கேட்டுக்கொண்டது. பின்பு இந்த படத்திற்கு ரயில் என்று தலைப்பு மாற்றப்பட்டது. இதன் காரணமாக பட குழு மிகுந்த வருத்தத்தில் இருந்தது. இந்த நிலையில் இன்று படம் திரையரங்குகளில் ரயில் படம் வெளியாகி உள்ளது. ரயில் படத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைரமலா, ரமேஷ் வைத்யா, பர்வைஸ் மஹ்ரூ, ஷமீரா, கோச்சடை செந்தில், வைரம் பட்டி, பின்டூ, வந்தனா, பேபி தனிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜனனி இசையமைக்க, நாகூரான் இராமச்சந்திரன் எடிட்டிங் செய்துள்ளார்.
மேலும் படிக்க | Mookuthi Amman 2 : மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டைட்டில் லீக்! என்ன தெரியுமா?
தேனி அருகே உள்ள கிராமத்தில் கதை நடக்கிறது. அங்கு ஹீரோ குங்குமராஜ் வேலைக்கு செல்லாமல் தினசரி குடித்துவிட்டு எல்லாரிடமும் கடன் வாங்கியும் வைத்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. அந்த கிராமத்தில் இயங்கி வரும் ஒரு தொழிற்சாலையில் வட மாநிலத்தை சேர்ந்த நிறைய பேர் பணிபுரிகின்றனர். இதனால் அந்த ஊரில் உள்ள டீக்கடைகளில் கூட வடைக்கு பதில் பானி பூரி விற்கின்றனர். மேலும் ஹீரோ குங்குமராஜ் குடியிருக்கும் வீட்டின் எதிரில் சுனில் என்ற வட மாநிலத்தை சேர்ந்தவர் தங்கி இருக்கிறார். அவரைப் பார்த்தாலே குங்குமராஜிற்கு பிடிக்கவில்லை. மேலும் அவரது மனைவி செல்லம்மாவிடம் சுனில் பேசுவதும் அவர் மீது உள்ள வெறுப்பை அதிகரிக்க செய்கிறது.
ஒரு கட்டத்தில் அவரது நண்பர் பரதனுடன் சேர்ந்து சுனிலை கொல்ல திட்டமிடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக சுனில் இறந்துவிட அவரது இறப்பு குங்குமராஜின் வாழ்க்கையை மாற்றுகிறது. இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே ரயில் படத்தின் கதை. கடந்த ஆண்டு வெளியான அயோத்தி படத்தைப் போலவே இந்த படமும் சமூக நல்லிணக்கத்தை பற்றி பேசுகிறது. படம் முழுக்க கிராமத்து வாழ்வியலை அழகாக காட்டியுள்ளனர், இதில் ஒலிப்பதிவாளர் தேனி ஈஸ்வரர் பங்கு மிகவும் முக்கியமானது. படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நன்றாக நடித்து இருந்தாலும் முத்தையாவின் மனைவியாக செல்லமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வைரமாலா தனியாக நிற்கிறார்.
வடமாநிலத்தரை பார்த்தாலே தமிழ்நாட்டில் இருக்கும் சிலருக்கு வெறுப்பு உணர்வு ஏற்படுகிறது, தங்களது வேலைகளை அவர்கள் எடுத்துக் கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் பொதுவாக இருந்து வருகிறது. அதனை உடைக்கும் விதமாக ரயில் படத்தின் கதை அமைந்துள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வந்து இங்கே வேலை பார்ப்பதால் அவர்கள் என்னென்ன சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதையும் ஒரு சில இடங்களில் சுட்டிக்காட்டி உள்ளார் இயக்குனர். இசையமைப்பாளர் ஜனனி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது. இயக்குனர் பாஸ்கர் சக்தி தான் எடுத்துக்கொண்ட நல்ல கதையை இன்னும் சற்று சுவாரசியமாக சொல்லி இருக்கலாம்.
மேலும் படிக்க | RJ Balaji: ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் அடுத்த படம்! மிரட்டல் போஸ்டர் வெளியீடு..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ