வயநாட்டில் போட்டியிடும் பிரியங்கா காந்தி... ராய்பரேலியை தக்கவைக்கும் ராகுல் - ஸ்வீட் சர்ப்ரைஸ்!

Rahul Gandhi Resigns Wayanad: 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி (Rahul Gandhi) தற்போது ராய்பரேலி தொகுதியை தக்கவைக்க உள்ள நிலையில், பிரியங்கா காந்தி (Priyanka Gandhi) வயநாட்டில் போட்டியிட உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 17, 2024, 08:23 PM IST
  • அடிக்கடி வயநாட்டிற்கு வருவேன் - ராகுல் காந்தி
  • இரண்டு தொகுதிகளுக்கு இரண்டு எம்பிகள் கிடைத்திருக்கின்றனர் - ராகுல் காந்தி
  • ராகுல் காந்தி நாளை ராஜினாமா செய்வார்.
வயநாட்டில் போட்டியிடும் பிரியங்கா காந்தி... ராய்பரேலியை தக்கவைக்கும் ராகுல் - ஸ்வீட் சர்ப்ரைஸ்! title=

Rahul Gandhi Resigns Wayanad: நடைபெற்று முடிந்த மக்களவை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். 2019ஆம் ஆண்டில் தான் வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட ராகுல் காந்தி, உத்தர பிரதேசத்தின் ராய்பரேலி தொகுதியிலும் போட்டியிட்டார். 

ராகுல் காந்தி இதில் இரண்டு தொகுதியிலுமே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வயநாடு தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிபிஎம் கட்சி வேட்பாளர் ஆனி ராஜாவை 3 லட்சத்து 64 ஆயிரத்து 422 வாக்குகள் வித்தியாசத்திலும், ராய்பரேலி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கை 3 லட்சத்து 90 ஆயிரத்து 30 வாக்குகள் வித்தியாசத்திலும் ராகுல் காந்தி தோற்கடித்தார்.

நாளை ராஜினாமா

இருப்பினும், நாடாளுமன்ற விதிகளின்படி இரு தொகுதிகளிலும் எம்பியாக நீடிக்க முடியாது என்பதால் ஒரு தொகுதியை நிச்சயம் ராஜினாமா செய்ய வேண்டும். அதுவும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 14 நாள்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதியாகும். அதன்படி பார்த்தால் ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின, ராகுல் காந்தி ராஜினாமா செய்ய ஜூன் 18ஆம் தேதி கடைசி தேதியாகும். எனவே, அதற்கான அறிவிப்பை இன்று ராகுல் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் படிக்க | கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்து: யார் காரணம்? TA 912 ஆவணம் மூலம் வெளிவந்த புதிய தகவல்

இந்நிலையில், நியூ டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் இல்லத்தில் இன்று மாலை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், மல்லிகார்ஜூன கார்கே உடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் இருந்தனர். அதில், ராகுல் காந்தி வயநாடு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு, ராய்பரேலி தொகுதியை தக்கவைக்க விருப்பப்படுவதாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

வயநாட்டில் பிரியங்கா போட்டி...

அதுமட்டுமின்றி, ராகுல் காந்தியின் இளைய சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர்களின் ஒருவரான பிரியங்கா காந்தி கேரளாவின் வயநாட்டில் இருந்து போட்டியிடுவார் என்றும் அறிவித்தார். இதன்மூலம், பிரியங்கா காந்தி வயநாடு மூலம் தேர்தல் அரசியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார். மேலும், செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி தங்களுக்கு எம்.பி,யாக இல்லையே என வயநாடு மக்கள் நினைக்காத அளவிற்கு தான் பணியாற்றுவேன் என்றார்.

2 தொகுதிகளுக்கும் 2 எம்.பி.கள்

மேலும் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது,"ராய்பரேலி மற்றும் வயநாடு தொகுதிகளின் மக்களுடன் எனக்கு பாசமான உறவு இருக்கிறது. கடந்த 5 வருடங்கள் நான் மக்களவை உறுப்பினராக இருந்தது ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது. வயநாடு மக்கள் என்னுடன் நின்றார்கள், என் மீது அன்பையையும், பாசத்தையும் பொழிந்தார்கள். கடினமாக சூழல்களை எதிர்கொள்ளும் சக்தியையும் தந்தார். அதனை நான் மறக்கவே மாட்டேன். 

பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிடுகிறார் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். இருப்பினும் நான் வயநாட்டிற்கு அடிக்கடி வந்து செல்வேன். வயநாடு மற்றும் ராய்பரேலி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் இரண்டு எம்.பி.,கள் கிடைத்திருக்கிறார்கள்" என்றார்.

மேலும் படிக்க | 'தொடரும் ரயில் விபத்துகள்... தடுக்கும் Kavach வேலை செய்யவில்லையா?' - ரயில்வேயின் பதில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News