விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் முதல் நாள் டிக்கெட் விற்பனை இலங்கையில் தொடங்கியுள்ளது. அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பீஸ்ட் ட்ரைலர் வெளியாகும் Premium Large Format என்றால் என்ன?


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது. விஜய்யின் ரசிகர்கள் பீஸ்ட் ட்ரைலரை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் ஜான் விஜய் ஆகியோரும் நடித்துள்ளனர். 



ஏற்கனவே படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. முதலில் வெளியான அரபிக்குத்து பாடல் 256 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. பீஸ்ட் படத்தின் டிரைலர் 2 நிமிடங்கள் 57 நொடிகள் ஓடும் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 


மேலும் படிக்க | சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடியிடம் இத்தனை கார்களா? அசத்தலான புகைப்படங்கள்!



இந்நிலையில் இலங்கையில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள டிக்கெட்டுகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பீஸ்ட் படம் இதுவரை வெளியான விஜய் படங்களை விட கூடுதலாக வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடத்துள்ளார். 


இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், படம் வெளியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR