ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து கொண்டிருக்கும் 'பீஸ்ட்' படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சி கடலில் மூழ்க செய்து வருகிறது.  பாடல்களை விட பாடல்களுக்கான ப்ரோமோக்கள் தான் ஹைலைட், இதுவரை வெளியான இரண்டு ப்ரோமோக்களும் ரசிக்கும்படியாகவும், சிரிக்கும்படியாகவும் அமைந்து இருக்கிறது.  பாடலின் ப்ரோமொக்களே அதிக பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருவது அனேகமாக தளபதி விஜயின் 'பீஸ்ட்' படமாக தான் இருக்கும்.  பிப்ரவரி-14ம் தேதி வெளியான அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வைகளை பெற்று ட்ரெண்டானது.  அன்றிலிருந்து இன்றுவரை பலரின் ப்லேலிஸ்டிலும் அரபிக்குத்து தான் முதலிடத்தில் இருந்து வருகிறது.  திரை பிரபலங்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் இப்பாடலுக்கு நடனமாடி இப்பாடலை இன்றுவரை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.  சமூக வலைத்தளங்களை திறந்தாலே அரபிக்குத்து தான் இன்றுவரை ஒலித்து கொண்டிருக்கிறது, 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | டாப் ஹீரோக்கள் படங்களை பங்கமாய் கலாய்த்த ஆர்ஜே பாலாஜி!


'ஜாலியோ ஜிம்கானா' எனும் இப்படத்தின் இரண்டாம் சிங்கிள் குறித்த ப்ரமோவை கடந்த சில தினங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் வெளியிட்டனர்.  முதல் சிங்கிளின் ப்ரோமோவை போன்றே இந்த ப்ரோமோவும் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரிடையே அதிகளவில் வரவேற்பை பெற்றது.  அனிருத் இசையமைப்பில் விஜய் இந்த பாடலை பாடியுள்ளார், அந்த ப்ரோமோவில் விஜய், நெல்சன், அனிருத், விடிவி கணேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.  மார்ச்-19ம் தேதி முழு பாடலும் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் இன்றைய தினம் இப்பாடல் வெளியாகியுள்ளது.


'ரெண்டுல ஒன்னு பாக்கலாம்' என தொடங்கும் இந்த பாடல் நம்மை இலவசமாகவே கோவாவிற்கு அழைத்து செல்வது போன்ற எஃபெக்ட்டை கொடுக்கிறது.  அரபிக்குத்து பாடலின் மூலம் ட்ரென்ட்ட்ன சில சிக்னேச்சர் ஸ்டெப்ஸ் போன்று இப்பாடலின் மூலம் சில நடன அசைவுகள் ட்ரெண்டிங் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  வாழ்க்கையில் எதை பற்றியும் கவலைகொள்ளாமல், எவ்வளவு பெரிய சிக்கல் வந்தாலும் அதனை ஜாலியாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையை வாழ் என்பதை கூறும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது.  இப்பாடல் வெளியாகி விஜய் ரசிகர்களை ஜாலி மூடிற்கு கொண்டு சென்று இருக்கிறது, இனிமேல் சமூக வலைதளம் முழுக்க அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா தான் ஒலிக்கப்போகிறது.



மேலும் படிக்க | ஸ்டைல் ஹா, கெத்தா ரீஎண்ட்ரி கொடுத்த நடிகை பாவனா!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR