ஜெய்ப்பூரில் மீண்டும் BEAST சூட்டிங்..! விஜய் பங்கேற்பா?
பீஸ்ட் படத்தின் சில காட்சிகள் மீண்டும் படமாக்குவதற்காக படக்குழு ஜெய்ப்பூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் கோடை விருந்தாக திரைக்கு வரவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் சூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்தது. மேலும், புத்தாண்டு கொண்டாட்டமாக பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் பீஸ்ட் படத்தின் சில காட்சிகள் மீண்டும் படமாக்க வேண்டியுள்ளதாம்.
ALSO READ | Beast படபிடிப்புக்காக டெல்லி வந்த தளபதி விஜயின் வீடியோ வைரல்
அதற்காக ஜெய்ப்பூர் சென்றுள்ள படக்குழு, ஏற்கனவே எடுக்கப்பட்ட சில காட்சிகளில் திருத்தங்களை மேற்கொண்டு புதிதாக காட்சிகள் படமாக்கி வருகிறதாம். ஆனால், இதில் இளைய தளபதி விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கிறதா? என்ற தகவல் வெளியாகவில்லை. இந்த காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டவுடன், அடுத்தடுத்த அப்டேட்டுகள் மற்றும் முதல் சிங்கிள் குறித்த அப்டேட்டுகளை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், இளைய தளபதியுடன் இந்தப் படத்தில் கூட்டணி அமைத்துள்ளார். படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டே ஜார்ஜியாவில் தொடங்கியது. சில சண்டைக்காட்சிகள் மற்றும் ஒரு பாடல் அங்கு படமாக்கப்பட்டது. பின்னர் சென்னை திரும்பிய பீஸ்ட் குழுவினர், தமிழகம் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்ட செட்கள் அமைத்து முக்கிய காட்சிகளை படமாக்கினர். பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். வில்லன்களாக மலையாள நடிகர் ஷைன் டான் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ALSO READ | தளபதி விஜயின் ’Beast’ வெளியீட்டு தேதி அறிவிப்பு...!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR