விஜய்யின் கடந்த சில படங்களுக்கு ஆடியோ ரிலீஸ் விழா வைக்கப்பட்ட நிலையில் பீஸ்ட்டுக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்துவந்தது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை பீஸ்ட்டுக்கு ஆடியோ ரிலீஸ் நடத்தப்படவில்லை. பீஸ்ட் படத்திலிருந்து அரபிக் குத்து எனும்  பாடல் முதல் சிங்கிளாக வெளியானது. அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி பாடிய அப்பாடல் இணையத்தைக் கலங்கடித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிவிரைவாக 100 மில்லியன் பார்வைகளைப் பெற்ற பாடல் எனும் சாதனையைப் படைத்த அப்பாடல் யூடிப்பில் பல நாட்களாக தொடர் ட்ரெண்டிங்கில் இருந்தது. இதையடுத்து பீஸ்ட்  2ஆவது பாடலாக ஜாலியோ ஜிம்கானா எனும் பாடலை படக்குழு வெளியிட்டது. இப்பாடலை நடிகர் விஜய்யே தனது சொந்தக்குரலில் பாடியிருந்தார். கலக்கலான நடனத்துடன் வெளியான இப்பாடலும் இணையத்தை வசமாக்கியது.


                                                                  


மேலும் படிக்க | ‘அஜித்-61’ : கதை பிறந்த பின்னணி இதுதான்! 3ஆவது முறையாக க்ரீன் சிக்னல்!


இந்நிலையில் பீஸ்ட் படக்குழு புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது. அந்த வகையில் பீஸ்ட் படத்திலிருந்து 3ஆவது சிங்கிள் நாளை வெளியாகவுள்ளது. ‘பீஸ்ட் மோடு’ எனும் தலைப்பில் ரிலீஸ் ஆகவுள்ள இப்பாடல் இப்படத்தின் கதைக்களத்தை விவரிக்கும் முக்கியமான பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாடலாசிரியர் விவேக் விஜய்க்கு  எழுதிய முந்தைய பாடல்கள் ஹிட் அடித்ததால் இந்தப் பாடலும் நிச்சயம் மாஸ் காட்டும் எனக் கூறப்படுகிறது.



‘அடுத்த சம்பவம் லோடிங்’ எனத் தலைப்பிட்டு ட்விட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள சன்பிக்சர்ஸ் நிறுவனம் இதற்கான புரோமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் வெளியான முதல் இரு பாடல்களைப் போல இந்தப் பாடலையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து ரீட்வீட் செய்துகொண்டிருக்கின்றனர்.


மேலும் படிக்க | அதிக தியேட்டரில் ரிலீசாகும் முதல் படம்: ரெக்கார்டுகளை அடித்து நொறுக்கும் பீஸ்ட்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR