விஜய் நெல்சன் கூட்டணியில் உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக அரபிக் குத்து பாடலையும், விஜய் பாடிய ஜாலி ஓ ஜிம்கானா பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் திரைப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருப்பதால் டீசர் தேவை என ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். முன்னதாக பாடல் வெளியீட்டு விழா மார்ச் 20ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அதுவும் நடக்கவில்லை.


மேலும் படிக்க | அவரும் இல்ல, இவரும் இல்ல: ‘விஜய்-66’ ஹீரோயின் இவங்கதானாம்!


இந்நிலையில் நேற்று பீஸ்ட் தொடர்பான அப்டேட் வரும் என்று சன் பிக்ச்சர்ஸ் அறிவித்ததால் இது டீசர் தொடர்பான அறிவிப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஒரு போட்டோவை மட்டும் வெளியிட்டு அங்கேயும் ரசிகர்களை ஏமாற்றில் தள்ளியது படக்குழு. 



இதனால் WeWantBeastTeaser என விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அஜித் நடித்த வலிமை திரைப்படம் 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தபோது அவரது ரசிகர்கள் ஆங்காகே வலிமை அப்டேட் கேட்டு ரகளை செய்ததால் அஜித் தானாக முன்வந்து அறிக்கை வெளியிட்டு ரசிகர்கள் கட்டுப்படுத்தினார்.


மேலும் படிக்க | 4 கோடி சம்பளத்தை குடுங்க, சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு


தற்போது அதே மாதிரியான ஒரு நிலை விஜய் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியும் இல்லை. டீசரும் இல்லையா? டிரைலராவது விடுவீங்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றினை சன் டிவி தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR