ஷமியிடம் ‘பீஸ்ட்’ அப்டேட் கேட்ட ரசிகர்கள்: வைரல் வீடியோ!

கிரிக்கெட் வீரர் முகமது ஷமியிடம் ரசிகர்கள் பீஸ்ட் படத்தின் அப்டேட் கேட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
கிரிக்கெட் வீரர் முகமது ஷமியிடம் ரசிகர்கள் பீஸ்ட் படத்தின் அப்டேட் கேட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து அண்மையில் வெளியான படம் வலிமை. இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் செய்த செயல்கள் அவ்வளவு எளிதில் மறக்கக்கூடியதல்ல. யாரிடமெல்லாம் அப்டேட் கேட்கப்பட்டது எனச் சொல்வதைவிட யாரிடமெல்லாம் அப்டேட் கேட்கவில்லை எனக் கண்டறிந்து சொல்வது எளிது எனச் சொல்லும் அளவுக்கு வகை தொகையில்லாமல் வருவோர் போவோரிடமெல்லாம் அப்டேட் கேட்க ஆரம்பித்தனர்.
வலிமை படத்துக்குத் தொடர்பில்லாத சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை பலரிடமும் இந்த அப்டேட் கேட்கும் படலம் தொடர்ந்தது. அந்த வகையில் ஐபிஎல் தொடரின்போது சென்னை அணி வீரர் மொயின் அலியிடம் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டது இணையத்தில் வைரலானது. வலிமை படம் வெளியாகிவிட்டதால் அப்படம் குறித்து அப்டேட் கேட்பது தற்போது நின்றுள்ளது.
மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ ஆடியோ ரிலீஸ்: ரசிகர்களுக்கு 3 சர்ப்ரைஸ்!
இந்நிலையில், வலிமையைத் தொடர்ந்து தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தின் அப்டேட்டைக் கேட்கத் துவங்கியுள்ளனர் ரசிகர்கள். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியிடம் ரசிகர்கள் சிலர் பீஸ்ட் அப்டேட் கேட்டுள்ளனர். இந்தியா மற்றும் இலங்கை இடையே பெங்களூருவில் நடக்கும் 2ஆவது டெஸ்ட் போட்டியில்தான் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. களத்தில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஷமியிடம் ரசிகர்கள் பீஸ்ட் அப்டேட் கேட்கும் வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.
அஜித்தின் வலிமை குறித்து ஆரம்ப காலத்தில் பெரிதாக அப்டேட்டும் வெளியிடப்படவில்லை, இதனால் அதுகுறித்து அப்டேட் கேட்டதில்கூட லாஜிக் இருந்தது; ஆனால் பீஸ்ட் பற்றித் தொடர்ந்து அப்டேட் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் எதற்காக அப்டேட் கேட்கிறார்கள் எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
மேலும் படிக்க | பற்றி எரியும் சர்ச்சைப் பதிவு: ஷாருக்கானை சீண்டுகிறாரா அட்லி?!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR