சென்னை: லேடிலவ் நயன்தாராவின் பிறந்த நாளில், அவரது காதலன் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் சில அற்புதமான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த நயன்தாராவின் ரசிகர்கள் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்காக (Nayanthara) ஒரு பதிவை போஸ்ட் செய்தார். அதில் நயன்தாரா சூரிய அஸ்தமனத்தின் போதுள்ள அழகான மாலைக் காட்சியை ரசிப்பதைக் காண முடிகிறது.


நயன்தாராவுக்கு இன்று 36 வயதாகிறது.


"பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்று எளிமையாக தன் வாழ்த்துக்களை தெரிவித்த விக்னேஷ் தனது பதிவில் ஒரு சில எமோடிகான்களைச் சேர்த்துள்ளார். அந்த அழகான போஸ்டை இங்கே காணலாம்:



மேலும், நயன்தாராவின் வரவிருக்கும் படமான 'நெற்றிக்கண்’ படத்தின் டீஸர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்படும் என்றும் விக்னேஷ் அறிவித்தார்.



விக்னேஷ் சிவன் பெரும்பாலும் தனது சமூக ஊடக இடுகைகளில், விடுமுறை சுற்றுலாக்கள், ஷூட்டிங் என பல இடங்களில் எடுக்கப்பட்ட நயன்தாராவின் அழகான படங்களை பகிர்வதுண்டு.



இந்த ஜோடி சமீபத்தில் நயன்தாராவின் தாயின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக கோவா சென்றன. கோவா புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின.


‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷுக்கும் காதல் மலர்ந்தது. அவர்கள் ஐந்து ஆண்டுகளாக ஒன்றாக இருக்கிறார்கள்.


நயன்தாராவின் படங்களைப் பற்றி பேசினால், விக்னேஷ் இயக்கிய ‘நெற்றிக்கள்’ படத்தில் நயன்தாரா அடுத்து காணப்படுவார். இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக ‘தர்பார்’ படத்தில் நடித்தார்.


ALSO READ: Happy Birthday Nayanthara: ரசிகர்களுக்கு பரிசாக இன்று வெளியாகிறதா நெற்றிக்கண் டீசர்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR