விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஷோ நடுவர்களில் ஒருவராக இருக்கும் பென்னி தயால், வெஸ்டர்ன் பாடல்களை பாடுவதில் ஸ்பெஷலிஸ்ட். மற்றொரு பாடகரின் ஸ்டைலில் அவர்களுடைய குரலிலும் பாடியும் அசத்துவார். சூப்பர் சிங்கர் மேடைகளில் அதுபோன்ற மாயாஜாலங்களை நிகழ்த்துவதால் ரசிகர்களுக்கு மிகுந்த பரிட்சையமானவராகவும் மாறியுள்ளார் பென்னி தயால். 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



டான்ஸ், டைமிங் காமெடியும் இவரின் திறமைகள் என்பதால் இசைவிழாக்களில் இவருடைய ஃபர்ஃபாமென்ஸ் ரசிகர்களை கட்டிப்போட்டுவிடும். பிறந்தது கேரள மாநிலம் கொல்லம் என்றாலும், படித்தது சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில். ஜர்னலிசம் படித்துக்கொண்டிருக்கும்போது எஸ்5 இசைக்குழுவில் சேர்ந்து பாடத்தொடங்கிய அவருக்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மூலம் திரையிசையில் வாயப்பு கிடைத்தது. ’டாக்சி டாக்சி’ ‘ ஓ மணப்பெண்ணே’ பாடல்கள் திரைத்துறையில் இவரின் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தன.



சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவர், தன்னை விமர்ச்சித்த நெட்டிசனை கையும் களவுமாக பிடித்துள்ளார். லாரன் மாடரி (Lauren Modery) என்பவர், பிரபலங்களுடனான உங்களின் விநோதமான சந்திப்பின் அனுபவம் குறித்து பகிருங்கள் என தெரிவித்திருந்தார். அதற்கு Birdman என்ற நெட்டிசன், பென்னி தயாளுடன் சக்கரக்கட்டி பட ஆடியோ வெளியீட்டுவிழாவில் நடைபெற்ற சந்திப்பு குறித்தும், அப்போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். 



 



இந்த புகைப்படத்துக்கு கீழ் கமெண்ட் செய்த @ganesh16632927 என்ற நெட்டிசன், பென்னி தயாள் எல்லாம் பிரபலமா? என ஒருமையில் கமெண்ட் அடித்திருந்தார். இந்த கமெண்டை படித்த பென்னி தயாள், " Yenda ipdi???" ரிப்ளை போட்டு, நெட்டிசனை ஷாக்காக வைத்தார். உடனே அந்த நெட்டிசன் ’Just for fun. Sorry Benny!’ என சரணாகதியடைய பதிலுக்கு " இதெல்லாம் நான் பாக்க மாட்டேனு நினைச்சிட்டியா?" என பென்னி தயால் கமெண்ட் அடித்தார். கடைசியாக, வடிவேலு GIF ஒன்றை போட்டு உரையாடலுக்கு என்டு கார்டு கொண்டு வந்தார் நெட்டிசன் @ganesh16632927.



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR