இந்த 8 கன்னட மொழி த்ரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!
Best Kannada Movies: கன்னட மொழியில் முன்னர் வெளியாகி வெற்றிநடைபோட்ட சில க்ரைம் திரைப்படங்கள் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ இயங்குதளத்தில் காண கிடைக்கின்றது.
1) காவலுதாரி (2019): ஹேமந்த் எம் ராவ் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான நியோ-நோயர் த்ரில்லர் திரைப்படம் 'காவலுதாரி'. பிஆர்கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் அஷ்வினி புனித் ராஜ்குமார் தயாரித்திருந்த இந்த படத்தில் ரிஷி, அனந்த் நாக், அச்யுத் குமார், சுமன் ரங்கநாதன், ரோஷ்னி பிரகாஷ், சுலைல் குமார், சம்பத், சித்தார்த்த மற்றும் மாத்யமிகா போன்ற பலர் நடித்திருந்தனர். ஷ்யாம் எனும் நேர்மையான போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர், சாலை கட்டுமானத்தின் போது அங்கு புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அறிகிறார். ஒரு குழந்தை உட்பட ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று எலும்புக்கூடுகள் அங்கு கண்டெடுக்கப்படுகிறது. தனது உயரதிகாரிகளின் எச்சரிக்கைகளை மீறி அந்த காவலர் இந்த கொலை குறித்து விசாரிக்க தொடங்குகிறார். அந்த எலும்புக்கூடுகள் நாற்பது ஆண்டுகள் பழமையானவை என்பதை தடயவியல் நிபுணர்கள் மூலம் கண்டறிகிறார். பல பிரச்சனைகளை மீறி இறந்தவர்கள் யார்? எந்த காரணத்திற்காக கொல்லப்பட்டார்கள் என்பதை கண்டறிய காவலர் படும் போராட்டத்தை படம் காட்டுகிறது.
2) பீர்பால் ட்ரைலாஜி கேஸ் 1: ஃபைண்டிங் வஜ்ரமுனி: எம்.ஜி. ஸ்ரீனிவாஸ் எழுதி, இயக்கி, நடித்திருந்த பீர்பால் ட்ரைலாஜி கேஸ் 1: ஃபைண்டிங் வஜ்ரமுனி திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. இந்த க்ரைம் த்ரில்லர் படத்தில் எம்.ஜி.ஸ்ரீனிவாஸ், ருக்மணி வசந்த், மதுசூதன் ராவ், சுஜய் சாஸ்திரி, வினீத் குமார் போன்ற பலர் நடித்திருந்தனர். விஷ்ணு என்பவர் ஒரு இறந்த உடலைக் கண்டு அதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்கும்போது, போலீசார் அந்த கொலைக் குற்றச்சாட்டைப் புகார் கொடுத்தவர் மீது பொய்யாகக் குற்றம் சாட்டி அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களை கொலை குற்றத்திலிருந்து விடுவிக்கவும், உண்மையை கண்டறியவும் வழக்கறிஞர் மகேஷ் தாஸ் போராடுகிறார். மர்மமான கொலை மூலம் நடக்கும் பல பிரச்சனைகளை இப்படம் காட்டுகிறது.
3) சீதாராம் பெனாய் வழக்கு எண்.18: தேவி பிரசாத் ஷெட்டி இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் 'சீதாராம் பெனாய் வழக்கு எண்.18'. இப்படத்தில் விஜயராகவேந்திரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகவும் கண்டிப்பான மற்றும் நேர்மையான அதிகாரியான சீதாராம் பெனாய், ஷிவமொக்காவில் உள்ள ஆனேகாட் காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறார், அங்கு அவருக்கு வரவேற்பு அவ்வளவு சிறப்பாக இல்லாமல் இருக்கிறது. அந்த அதிகாரியின் வீட்டில் திருட்டு நடக்கிறது மற்றும் அந்த மாவட்டம் முழுவதும் திருட்டு நடக்கிறது, இதனை சீதாராம் விசாரிக்க தொடங்குகிறார். அந்த திருட்டு கும்பலுக்கும், 'வழக்கு எண்.18' என்ற கொலை வழக்கிற்கும் தொடர்பு இருப்பதை சீதாராம் கண்டுபிடிக்கிறார், அதன்பின்னர் பல பரபரப்பான திருப்பங்கள் ஏற்படுகிறது.
4) வ்ரித்ரா: ஆர்.கெளதம் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான இண்டிபெண்டண்ட் க்ரைம் திரைப்படம் 'வ்ரித்ரா'. இந்த படத்தில் நித்ய ஸ்ரீ, பிரகாஷ் பெலவாடி, சுதா ராணி, ரவி சீதாராமன், தருண் சுதிர் ஆகியோர் நடித்திருந்தனர். காவல் துறை அதிகாரியான இந்திர ராவ், ஒரு தற்கொலை வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வருகிறார். விசாரணையை தீவிரப்படுத்தும்போது பல சிக்கல்கள் எழுகிறது. உயர் அதிகாரிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் உண்மையை வெளிப்படுத்த அந்த அதிகாரி போராடுவதை படம் காட்டுகிறது.
5) யு-டர்ன்: பவன் குமார் இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டில் வெளியான சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் படம் 'யு-டர்ன்'. இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோஜென் நாராயண், ராதிகா சேட்டன், திலீப் ராஜ் போன்ற பலர் நடித்திருந்தனர். பெங்களூரின் இரட்டைச் சாலை மேம்பாலத்தில் ஒரு சிறிய யு-டர்ன் எடுக்க விதிகளை மீறும் நபர்களை பற்றி ரச்சனா எனும் பத்திரிக்கையாளர் கதை எழுதுகிறார். அந்த சாலையில் அந்த யூ டர்ன் எடுத்த அனைத்து பயணிகளும் சம்பவத்தன்று உயிரை மாய்த்துக்கொள்கின்றனர், அந்த மரணங்களுக்கு ரச்சனாவிற்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு அவர் கைது செய்யப்படுகிறார். பின்னர் தன்னை குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க விசித்திரமான நிகழ்வுகளை விசாரிக்க தொடங்குகிறார்..
6) ஊர்வி: பி.எஸ்.பிரதீப் வர்மா இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டில் வெளியான க்ரைம் திரைப்படம் 'ஊர்வி'. இந்த படத்தில் ஸ்ருதி ஹரிஹரன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்வேதா பண்டிட், அச்யுத் குமார், மதுகர் நியோகி போன்ற பலர் நடித்திருந்தனர். வாழ்க்கையில் ஆண்களால் சுரண்டப்பட்டு, தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட மூன்று பெண்கள் பழிவாங்க முடிவு செய்கிறார்கள். ஒரு விபச்சார விடுதியில் உள்ள மூன்று பெண்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் அங்கு அனுபவிக்கும் துன்பத்தை இப்படம் காட்டுகிறது.
7) அலிடு உலிடவரு: அரவிந் சாமி இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் 'அலிடு உலிடவரு'. இப்படத்தில் ஷூன்யா, அதுல் குல்கர்னி, பவன் குமார், அன்கிதா போன்ற பலர் நடித்திருந்தனர். திகில் கதைகளை தொகுத்து வழங்கும் ஒரு பிரபலமான நிகழ்ச்சியின் தொகுப்பாளர் 100-வது எபிசோடைக் கொண்டாட ஒரு பேய் வீட்டில் ஒரு இரவு தனியாக இருக்க முடிவு செய்கிறார். முழு நகரமும் அவரது அனுபவத்தைக் கேட்க காத்திருக்கும் போது, அடுத்த நாள் அவர் இறந்து கிடந்தார். பின்னர் ஒரு போலீஸ் அதிகாரி பின்னர் வீட்டை விசாரித்து அவரது மரணத்தின் காரணத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கையில் அங்கு நடைபெறும் அமானுஷ்யங்களை படம் காட்டுகிறது.
8) மாயாபஜார் 2016: ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான நகைச்சுவை கலந்த க்ரைம் திரைப்படம் 'மாயாபஜார் 2016'. இந்தியாவில் பணமதிப்பழிப்பு காலத்தில் அமைக்கப்பட்ட மாயாபஜார் 2016 , வருமான வரித்துறை அதிகாரிகளாக காட்டிக்கொண்டு ஊழல் அரசியல்வாதிகளை கொள்ளையடிக்கும் குபேரா, ஜோசப் மற்றும் ராஜி ஆகியோரின் வாழ்க்கையை இப்படம் காட்டுகிறது. இப்படத்தில் ராஜ் பி.ஷெட்டி, வசிஷ்ட சிம்ஹா, அச்யுத்குமார், சுதா ராணி போன்ற பலர் நடித்திருந்தனர்.
மேலும் படிக்க | வடிவேலு பாடியுள்ள மாமன்னன் படத்தின் முதல் சிங்கிள்: இந்த தேதியில் வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ