Anna Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி நகைகளை வேறு பெட்டிக்கு மாற்றி தப்பிக்க தயாரான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, சௌந்தரபாண்டி, சனியன், பாண்டியம்மா ஆகியோர் தப்பித்து செல்லும் போது ஊர்க்காரர்கள் உதவியுடன் ஷண்முகம் பரணி வண்டியை தடுத்து நிறுத்து உங்க காரை சோதனை செய்யணும் என்று சொல்கின்றனர். ஒரு திருடன் உங்க காருக்குள்ள இருக்கிறதா தகவல் வந்துச்சு என்று சொல்லி வண்டியில் இருக்கும் பெட்டியை வெளியே எடுக்கின்றனர். 


சௌந்தரபாண்டி அதுல ஒன்னும் இல்ல என்று சொல்லி கொண்டிருக்க ஷண்முகம் பெட்டியை திறக்க பெட்டி காலியாக இருப்பதை பார்த்து பரணி குழப்பமும் அதிர்ச்சியும் அடைகிறாள். மறுபக்கம் நகைகளை ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து மறைத்து வைக்கிறான் முத்துப்பாண்டி. பரணியும் சண்முகமும் ஏமாற்றத்துடன் கிளம்பியதும் சௌந்தரபாண்டி இந்த ஐடியாவை கொடுத்த பாண்டியம்மாவுக்கு நன்றி சொல்கிறார். 


மேலும் படிக்க | தீரஜின் 'பிள்ளையார் சுழி' அனைவரையும் மகிழ்விக்கும்



 
அடுத்து வீட்டில் நகை எங்க போய் இருக்கும் என்று எல்லாரும் குழப்பத்தில் இருக்க பரணி இப்போதைக்கு அப்பா நம்புற ஒரே ஒரு ஆள் முத்துபாண்டி மட்டும் தான், நகைகளை அவன்கிட்ட கொடுத்து தான் ஸ்டேஷனில் ஒலிக்க வைச்சிருக்கணும். ஸ்டேஷனுக்கு போய் தேடி பார்க்கலாம் என்று சொல்ல ஷண்முகம், வைகுண்டம் அதை எப்படி ஸ்டேஷனில் வைக்க முடியும்? அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா.. சம்பளத்தையும் உயர்த்தினார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ